இனி குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கிடையாது - அரசு அதிரடி!

குழந்தைகள் போதுமான அளவு ஓய்வு எடுக்கவும், உடற்பயிற்சி செய்யவும் குழந்தைகளுக்கு வீட்டு பாடத்தை குறைத்துள்ளது சீன அரசு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2021, 07:04 PM IST
இனி குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கிடையாது - அரசு அதிரடி! title=

பீஜிங்: கொரோனா காலகட்டம் பல தொழில்களையும்,செயல்களையும் முடக்கிவிட்டது.அதிலும் குறிப்பாக குழந்தைகளின் கல்வி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.  பள்ளி முதல் கல்லூரிகள் வரை அனைத்தும் கொரோனா தாக்கத்தால் மூடப்பட்டு ஸ்தம்பித்து போயின.பின்னர் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஒவ்வொரு நாடும் வழிவகை செய்து வருகிறது.

ALSO READ மறைந்த நண்பனின் மகளுக்கு தந்தையாக நின்ற வின் டீசல்!

மற்ற நாடுகளை போலவே சீனாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கற்பிக்கப்பட்டது. இந்த ஆன்லைன் வழி கல்வியினால் மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பள்ளிகள் திறக்கப்பட்டது. 

ஆன்லைன் வழிக்கல்வியில் தான் அதிகப்படியான பாட சுமைகள் கொடுக்கப்பட்டது. ஆனாலும்,பள்ளிகள் திறந்த பிறகும் மாணவர்களுக்கு அதிக அளவிலான வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டது.இந்தப் பாட சுமையால் மாணவர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்பட்டது.  வீட்டுப்பாடம் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துவதால் அவர்களுக்கு விளையாடுவதற்கு அல்லது வேறு அறிவுசார்ந்த செயல்களில் ஈடுபடுவதற்கும் போதிய நேரம் கிடைக்கவில்லை.இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை அளித்தது. 

china

இதுபற்றி அரசு தரப்பில் கூட்டம் போட்டு ஆலோசனை செய்யப்பட்டது.ஆலோசனைக்கு பிறகு மாணவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டாம் என முடிவு செய்தனர்.  இதற்கென்றே புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு நடத்த வேண்டாம் என்று அந்த தேர்வினை அரசு ரத்து செய்ததையடுத்து, வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  மேலும்,குழந்தைகள் போதுமான அளவு ஓய்வு எடுக்கவும், உடற்பயிற்சி செய்யவும், அவர்கள் அதிக நேரம் இணையத்தில் செலவழிக்காமல் இருப்பதற்காகவும் பெற்றோர்கள் சீன அரசாங்கத்தையும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புதிய கல்விச் சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ திருமணத்தில் கலந்துக் கொள்ள விருந்தினர்களை வாடகைக்கு எடுக்கும் விசித்திர நாடு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News