இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை உள்ளது உண்மை தான். ஆனால், கடந்த 40 வருடங்களில், எல்லை பிரச்சனை காரணமாக ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்கப்படவில்லை என்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி கூறி இருந்தார்.
இதனையடுத்து, இருநாட்டு எல்லைப் பிரச்சனை குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீனா வரவேற்பு தெரிவித்தது.
இந்நிலையில், எல்லைப் பிரச்சனை தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சை சீனா வரவேற்றுள்ளது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெண்டகன் வெளியிட்டுள்ல செய்தி:-
கடந்த சில வருடங்களில் இந்தியா - சீனா இடையிலான பொருளாதார உறவு அதிகரித்து வந்த போதும், இருநாட்டு எல்லைப் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா தனது படைகளை தற்போது நிறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள பெண்டகன், சீனா அண்டை நாடுகளுடனான அத்துமீறல் சிலவற்றை பட்டியலிட்டுள்ளது.