சீனாவில் விமான விபத்து: 133 உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி வீடியோ

போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 21, 2022, 04:03 PM IST
  • வெளியான அதிர்ச்சி வீடியோ
  • சீனாவில் விமான விபத்து
  • அனைவரும் பலி எனத் தகவல்
சீனாவில் விமான விபத்து: 133 உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி வீடியோ title=

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலி என தகவல் வெளியாகியுள்ளது. 

 

விபத்து நடந்த இடத்தில் தற்போது மீட்புக்குழு விரைந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சீனாவின் குவாங்ஸி பகுதியில் தரையிரங்க இருந்த விமானம் தவறி தலைக்குப்புற விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.7 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த விமானம் மோதியதில் மலையின் உச்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மீட்புக்குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 132 பேருடன் புறப்பட்ட இந்த விமானத்தில் 9 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News