உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் கோதுமை ஏற்றுமதிக்குத் உடனடியாகத் தடை விதிப்பதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது. மேலும் அரசு மூலம் ஏற்றுமதி செய்வதால் உண்மையாக உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவை விமர்சித்த ஜி-7 நாடுகளுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன அரசின் அதிகாரப் பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் (Global Times)-ல் வெளியாகி உள்ள கட்டுரையில், கோதுமை ஏற்றுமதித் தடை விவகாரத்தில் இந்தியாவைக் குறை கூறுவதால் உணவுப் பிரச்சனை தீர்ந்துவிடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டாம் என இந்தியாவை வலியுறுத்தும் ஜி-7 நாடுகளின் விவசாய அமைச்சர்கள், ஏன் தங்களது ஏற்றுமதியை அதிகரித்து உணவு விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்தக் கூடாது என சீனா கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராக இருந்தாலும், கோதுமை ஏற்றுமதியில் ஒரு சிறிய பங்கு மட்டுமே வகிப்பதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில வளர்ந்த நாடுகளே கோதுமை ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் குளோபல் டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது.
மேலும் உணவுப்பற்றாக்குறை காரணமாக சில மேற்கத்திய நாடுகளே ஏற்றுமதியைக் குறைக்க முடிவு செய்துள்ள நிலையில், தனது உள்நாட்டு உணவு விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக இந்தியா ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதை அவை விமர்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என சீனா இந்தியாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளது. சர்வதேச உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஜி-7 நாடுகளின் முயற்சிகள் வரவேற்கப்படுவதாகவும், அதே சமயம் இதற்காக இந்தியா போன்ற வளரும் நாடுகளை விமர்சிக்க வேண்டாம் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | புற்று நோயால் ரஷ்ய அதிபரின் உடல் நிலை மோசமாகிறதா... வெளியான அதிர்ச்சித் தகவல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR