கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிடுகிறதா

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ராணுவ பலத்தை விரிவுபடுத்தும் ராணுவ தளத்தின் கட்டுமானப் பணிகளை கம்போடியாவில் சீனா துவக்கவிருக்கிறது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2022, 06:32 PM IST
  • சீனாவின் புதிய ரகசிய ராணுவ தளம்
  • கம்போடியாவில் கால்பதிக்கும் சீனாவின் திட்டம்
  • மலாக்கா ஜலசந்திக்கு அருகில் ரகசிய கடற்படை தளத்தை உருவாக்கும் சீனா
கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிடுகிறதா title=

பசிபிக் பகுதியில் ஆதிக்கம் செய்ய முடியாத நிலையில், கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ராணுவ பலத்தை விரிவுபடுத்தும் ராணுவ தளத்தின் கட்டுமானப் பணிகளை கம்போடியாவில் சீனா துவக்கவிருக்கிறது. 

கம்போடியாவில் அமையவிருக்கும் இந்த ராணுவத்தளம் மலாக்கா ஜலசந்தி (Malacca Straits)க்கு அருகில் சீனாவின் ராணுவ செல்வாக்கையும் அதிகரிக்கும்.

மலாக்கா ஜலசந்தி (Malacca Straits) இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தனது ராணுவ தளத்தை அமைப்பதால், உலக வர்த்தகத்திற்கான சீனாவிற்கு இருக்கும் பெரிய தடை அகலும்.

பசிபிக் பகுதியில் தனது விருப்பங்கள் நிறைவேறதா நிலையில் தற்போது சீனா இப்போது கம்போடியாவில் ஒரு ரகசிய கடற்படை தளத்தை உருவாக்க விரும்புகிறது.

மேலும் படிக்க | பள்ளிப் புத்தகங்களில் ஆபாச ஓவியங்கள்: சீனாவில் சர்ச்சை

பசிபிக் பகுதியில் சமீபத்தில் நடந்த விஷயங்கள்மீண்டும் நிகழாமல் இருக்க, ஆசியான் நாடுகளுக்கு இடையே நீண்டகால ஆதரவாளரைத் தேர்ந்தெடுத்துள்ளதால், சீனா தற்போது பாதுகாப்பான தேர்வுக்கு செல்வதாகத் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலக வல்லரசாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஆசிய நாட்டிற்குக் இந்த நடவடிக்கை முக்கியமானதாக இருக்கும் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

புதிய ராணுவ தளத்தின் சாத்தியம் தொடர்பாக, சீனா மற்றும் கம்போடியா நாடுகளின் அரசாங்கங்கள் மறுப்பு தெரிவித்தாலும், சீனாவின் புதிய ராணுவ தளம், தாய்லாந்து வளைகுடாவில் உள்ள ரீம் கடற்படை தளத்தில் வரும் என்று  'தி வாஷிங்டன் போஸ்ட்' ஊடகத்திடம் மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ராணுவ ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் இந்த தளத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும்.

மேலும் படிக்க | இந்தியாவின் வெற்றியும், சீனாவின் தோல்வியும்...! பிரதமர் மோடியைப் பாராட்டிய ஜோ பைடன்

கம்போடியாவில் வரவிருக்கும் இந்த தளம் மலாக்கா ஜலசந்திக்கு அருகில் சீன இராணுவ செல்வாக்கையும் அதிகரிக்கும். இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு திட்டமிட வேண்டியிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  

"சீனாவின் தலைவர்களுக்கு இந்தோ-பசிபிக் ஒரு முக்கியமான பகுதி என்று நாங்கள் மதிப்பிடுகிறோம், அவர்கள் இந்தோ-பசிபிக் பகுதியை சீனாவின் சரியான மற்றும் வரலாற்று செல்வாக்கு மண்டலமாக பார்க்கிறார்கள். பல துருவ உலகத்தை நோக்கிய உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக சீனாவின் எழுச்சியை அவர்கள் பார்க்கிறார்கள், அங்கு பெரும் சக்திகள், தங்கள் செல்வாக்கு மண்டலத்தில் தங்கள் நலன்களை வலுவாக வலியுறுத்துகின்றன, ”என்று ஒரு மேற்கத்திய நாடுகளின்அதிகாரி கூறினார்.

ரீம் தளத்தை விரிவாக்கம் செய்வதற்கான விழா இந்த வாரம் நடைபெறும். ஆனால் ராணுவ தளம் அமைப்பது பற்றி எந்த தகவலும் அறிவிக்கப்படாது என்றும் தெரிகிறது.  

மேலும் படிக்க | Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News