China hackers இந்திய அரசின் வலைத்தளங்களை குறிவைக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் கவலை

சீன ஹேக்கர்கள், இந்திய உள்ளிட்ட பிற நாடுகளின் கணினி வலையமைப்புகளை எவ்வாறு ஹேக் செய்ய சதி செய்கிறார்கள் என்பது குறித்து நீதித் துறை விசாரணையில் மீண்டும் ஒரு முறை கேள்வி எழுப்பப்பட்டது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 22, 2020, 06:59 PM IST
China hackers இந்திய அரசின் வலைத்தளங்களை குறிவைக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் கவலை title=

புதுடெல்லி: சீன ஹேக்கர்கள் வழக்கு குறித்து இந்திய பாதுகாப்பு நிறுவனங்களின் கவலைகள் அதிகரித்துள்ளன. இந்திய அரசாங்க வலையமைப்பை குறிவைத்தது, வெளிநாடுகளின் அரசாங்க கணினி வலையமைப்போடு தொடர்பு கொண்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்ட ஐந்து சீன ஹேக்கர்கள் தொடர்பாக அமெரிக்கா (USA) நீதித்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஹேக்கர்கள் குறிவைத்ததாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது.

மென்பொருள் தயாரிப்பாளர்கள், கணினி வன்பொருள் (computer hardware) உற்பத்தியாளர்கள், தொலைத்தொடர்பு வழங்குநர்கள், சமூக ஊடக நிறுவனங்கள், வீடியோ கேம் நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என பல முக்கிய நிறுவனங்களும் இதில் அடங்கும். அதுமட்டுமல்ல வெளிநாட்டு அரசாங்கங்களும், ஜனநாயகத்துக்கு ஆதரவு கொடுக்கும் சார்பு அரசியல்வாதிகள் மற்றும் Hong Kongஇல் சமூக ஆர்வலர்களும் குறிவைக்கப்பட்டனர்.

சீன ஹேக்கர்கள் இந்திய கணினி வலையமைப்பை அச்சுறுத்துகின்றனர்
நீதித் துறை விசாரணையில், சீன ஹேக்கர்கள் மற்ற நாடுகள் உள்ளிட்ட இந்திய கணினி வலையமைப்புகளை (computer network) எவ்வாறு ஹேக் செய்ய சதி செய்கிறார்கள் என்பது குறித்து மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டன. Zee Media விடம் பேசிய மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 'சீன மற்றும் வட கொரிய ஹேக்கர்களுக்கு எதிராக இந்திய சட்ட அமலாக்க முகமைகள் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு சேவையகங்கள் (servers) ஹேக் செய்யப்பட்டன  

2019 ஆம் ஆண்டில்,   இந்திய அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் virtual private networks மற்றும் தரவுத்தள சேவையகங்களை ஹேக் செய்தனர். மூலம் இந்திய அரசாங்கத்தை ஆதரித்ததாக அந்த அதிகாரி கூறினார். சதிகாரர்கள் வி.பி.எஸ் வழங்குநர் சேவையகங்களை (VPS provider servers) பயன்படுத்தி இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான networkஐ, பொதுவான வி.பி.என் உடன் இணைக்கப் பயன்படுத்தினர். இந்திய அரசாங்கத்தின் சிறப்பு கணினிகளில் கோபால்ட் ஸ்ட்ரைக் (cobalt strike malware) என்ற தீம்பொருளை நிறுவினார்கள்.

விசாரணையின் படி, பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் 'APT41,' 'Barium,' 'Winnti,' 'Wicked Panda,' மற்றும் 'Wicked Spider' போன்ற லேபிள்களைப் பயன்படுத்தினர். இவற்றைப் பயன்படுத்தி, மூலக் குறியீடு திருட்டு, மென்பொருள் குறியீடு, கையொப்பமிடல் சான்றிதழ், வாடிக்கையாளர் கணக்குத் தரவு மற்றும் வணிக தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டன. இந்த தகவலை நீதித்துறை பகிர்ந்துள்ளது. இந்த ஹேக்கர்கள் பல தனியார் கணினிகளில் ransomware மற்றும் crypto-jacking திட்டத்தின் தவறான பயன்பாட்டைப் பயன்படுத்தி தகவல்களையும் பெற்றனர்.

Also Read | Indian Army warns China: போரைத் தொடங்கிப் பார் என  சவால் விடுக்கும் இந்திய ராணுவம்

தவறான பாதையில் சீனா

அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் ஜெஃப்ரி ஏ. ரோசன் (Deputy Attorney General Jeffrey A. Rosen) கூறுகையில், இந்த சீன குடிமக்கள் கணினித் தரவை சட்டவிரோதமாகத் திருடி, இணையத் தாக்குதல்களை நடத்துவதைத் தடுப்பதற்கு ஏதுவாக  அனைத்து முயற்சிகளையும்  பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.   சீனாவைப் பாதுகாக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். சீனாவிற்கு வெளியே சைபர் தாக்குதல் கணினிகளை நடத்தி, அதன் மூலம் அறிவுசார் சொத்துக்களை அவர்கள் திருடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த மாதங்களில் பல வழக்குகள் வந்துள்ளன...

இந்தியாவில், கடந்த சில மாதங்களில் இதுபோன்ற பல வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் People's Liberation of Army (PLA)வைச் சேர்ந்த சீன ஹேக்கர்கள், சைபர் உளவு மூலம் நாட்டின் முக்கியமான தகவல்களை சேகரிக்க முயன்றனர். இந்த ஹேக்கர்கள் இணைய உளவுத்துறைக்கான தீம்பொருள் கருவிகளைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் ஒரு சிறப்பு கணினி நிரலை அனுப்ப முயற்சித்துள்ளனர். அரசாங்கங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளைத் தாக்க Icebug, Hidden Lynx, APT-12 ஆகியவற்றை சீன ஹேக்கர்கள் பயன்படுத்தியுள்ளனர்.  

சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியுள்ள சீன ஹேக்கர்கள்...

2014 ஆம் ஆண்டில், உளவு பார்த்ததாக 5 சீன ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. அவர்கள் '61398' பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது. யூனிட் '61398' போலவே, சீனாவிலும் இதுபோன்ற பல குழுக்கள் உள்ளன, அவற்றுக்கு PLAவின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க ஏஜென்சிகள் நம்புகின்றன. அவர்கள் உலகம் முழுவதும் இணைய உளவு வேலையில் ஈடுபட்டுள்ளனர். போரின் போது முக்கியமான உள்கட்டமைப்பை வெற்றிகரமாக குறிவைக்கும் திறனை இப்போது சீனா கொண்டுள்ளது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். சைபர் தாக்குதல்கள் மூலம் சீன ஹேக்கர்கள் மின்சார கட்டமைப்பு   மற்றும் வங்கி முறையை சீர்குலைக்கக்கூடும் என்பதும் கவலைக்குரிய விஷயம்...

Trending News