பயணச்சீட்டு இல்லைன்னா விமானத்தில் பறந்த பாம்புக்கு அபராதம் போடலாமா? வைரலாகும் நாகம்

Cobra Snake In Flight: பாம்புன்னா பத்தும் பறக்கும். ஆனால், பறக்கும் விமானத்தில் விஷப் பாம்பு இருந்தால், பறக்க முடியாது, இறங்கவும் முடியாது, அந்தரத்தில் என்ன செய்வது? இது நிஜமாக நடந்த சம்பவம்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 6, 2023, 06:32 PM IST
  • டிக்கெட் வாங்காம பயணிக்கும் ஃப்ளைட்டில் பறந்த பாம்பு
  • பயணச்சீட்டு இல்லைன்னா பாம்புக்கு அபராதம் போட முடியுமா?
  • விமானத்தில் விஷப் பாம்பு இருந்தால்? வைரலாகும் உண்மை சம்பவம்
பயணச்சீட்டு இல்லைன்னா விமானத்தில் பறந்த பாம்புக்கு அபராதம் போடலாமா? வைரலாகும் நாகம் title=

பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் காக்பிட் அறையில் நஞ்சு அதிகமாக உள்ள பாம்பு இருப்பதைப் பார்த்த விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். ஆனால், விமானத்தை இறக்கி சோதனையிட்டபோது பாம்பு விமானத்தில் இல்லை. அப்படி என்றால் பாம்பு எங்கே போனது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தெரியாமல் பலரும் மண்டையை சொறிகின்றனர். 

11,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் காக்பிட்டில் இருந்த விமானி ருடால்ப் எராஸ்மஸ், தனது பைலட் இருக்கைக்கு கீழே பாம்ப் இருப்பதைப் பார்த்தார்.

டிக்கெட் இல்லாமல் விமானப் பயணம் மேற்கொண்ட அந்த கொடிய விஷப்பாம்பை பார்த்ததும் விமானிக்கு என்ன தோன்றியிருக்கும்?

"உண்மையைச் சொல்வதென்றால், என்ன நடக்கிறது என்பதை என் மூளை பதிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறது. அந்தத் தருணம் பிரமிப்பையும் பயம் என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தையும் சொன்னது" என்று விமானி ருடால்ப் எராஸ்மஸ் கூறினார். பாம்பு, அவர் முதுகின் வழியாக இறங்கி இருக்கைக்கு கீழே வந்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

மேலும் படிக்க | நீதிமன்றத்தில் சரணடைந்தார்  டிரம்ப்... அமெரிக்காவில் பரபரப்பு!

ஏனென்றால், திடீரென முதுகில் குளிர்ச்சியான உணர்வு ஏற்பட்டதாகவும், அது, தனது தண்ணீர் பாட்டில் என்றும் நினைத்ததாகவும் விமானி ருடால்ப் தவறாகக் கருதினார். .

"அந்த குளிர்ச்சியான உணர்வை நான் உணர்ந்தேன், என் சட்டையின் மேல் பாம்பு ஊர்ந்து சென்றது," என்று அவர் கூறினார், பாட்டிலை சரியாக மூடாமல் வைத்திருந்தேன், அதனால் தண்ணீர் முதுகில் சொட்டுகிறது என்று நினைத்தாராம் அவர்!

"நான் இடது பக்கம் திரும்பி கீழே பார்த்தபோது, நாகப்பாம்பு இருக்கைக்கு அடியில் அதன் தலையை பின்வாங்குவதைக் கண்டேன்," என்று அவர் கூறினார்.
 
விமானம் ப்ளூம்ஃபோன்டைனில் இருந்து புறப்பட்டு பிரிட்டோரியாவுக்குச் சென்றது. பீச்கிராஃப்ட் பரோன் 58 என்ற அந்த தனியார் விமானத்தில் பாம்புடன் நான்கு பயணிகளும் இருந்தனர்.

மேலும் படிக்க | என்னது ட்ரம்ப் பாஜகவில் இணைகிறாரா? வைரலாகும் எம்.பி., மஹுவா மொய்த்ராவின் பதிவு!

கேப் கோப்ரா வகை பாம்பு ஒருவரை ஒரு முறை கடித்தால், அவர் 30 நிமிடங்களில் இறந்து போய்விடுவார் என்று கூறப்படுகிறது. பாம்பைப் பார்த்ததுமே,  பீதியைத் தவிர்க்க, விமானத்தில் பாம்பு இருக்கும் விஷயத்தைப் பற்றி பயணிகளிடம் சொல்லும் முன் நன்றாக சிந்தித்ததாக விமானி கூறுகிறார். 

"பாம்பு விமானத்தில் ஊர்ந்து சென்று பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தலாம்" என்று பயந்தேன். எனவே, பறக்கும் விமானத்தில் பாம்பு இருப்பதை பயணிகளுக்கு தெரிவிக்க முடிவு செய்தேன்.

"நான் பயணிகளுக்குத் தெரிவித்தேன்: 'விமானத்திற்குள் பாம்பு இருக்கிறது, அது என் இருக்கைக்கு அடியில் இருக்கிறது, அதனால் முடிந்தவரை விரைவாக தரையில் இறங்க முயற்சிப்போம்," என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

பாம்புடன் விமானத்தில் பயணிப்பது பற்றி விமானப் பயணிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பைப் பற்றி விவரித்த எராஸ்மஸ், அறிவித்ததும், ஊசி விழுந்தால், அந்த சப்தம் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது என்று கூறினார்.

மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!

பொதுவாக, விமானிகளுக்கு விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும்போதே, பல்வேறு சூழ்நிலைகளையும் கையாள்வதற்கான பயிற்சியைப் பெறுகிறார்கள், ஆனால் காக்பிட்டில் பாம்பு வரும் என்பதற்கான பயிற்சி கொடுப்பதற்கான வாய்ப்பு இதுவரை இருந்திருக்காது. ஆனால், எந்தவொரு சூழ்நிலையிலும் பீதியடையாமல் செயல்பட வேண்டும் என்ற பயிற்சி தான் எனக்கு உதவியது என்று எராஸ்மஸ் கூறினார்.

பாம்பு பயணித்த விமானம், வெல்கம் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உண்மையில், விமானம் முதலில் புறப்பட்ட இடத்திl ஒரு பாம்பு விமானத்திற்குள் நுழைந்ததைக் கண்டதாகவும், அதை "பிடிக்க" முயற்சித்ததாகவும், ஆனால் பலனளிக்கவில்லை என்றும் வொர்செஸ்டர் பறக்கும் கிளப்பில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் கூறினார்.

பயணிகளுடன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் பாம்பைக் கண்டுபிடிக்க முயற்சித்ததாக எராஸ்மஸ் கூறினார், ஆனால் "துரதிர்ஷ்டவசமாக அது அங்கு இல்லை, எனவே அது விமானத்தில் இருந்து வெளியேறியிருக்கலாம் என்று நினைத்தோம்". ஆனால், பாம்புக்கும் விமானப் பயணம் செல்லும் ஆசை இருந்தது போலும்!

மேலும் படிக்க | சிங்கத்துக்கே சவால் விடும் கழுதைப்புலி! சிங்கப் பெண்ணின் பரிதாப நிலை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News