Condom King: வீதியில் ஆணுறைகளை விநியோகிக்கும் ஆச்சர்ய நபர்..!!

'ஆணுறை ராஜா' என்று அழைக்கப்படும் இந்த நபர், ஆணுறைகளை ஏன் இலவசமாக விநியோக்கிறார் என்பதற்கான சுவாரஸ்யமான காரணத்தை அறிந்து கொள்ளலாம். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2021, 10:38 AM IST
  • ஆப்பிரிக்காவில் வாழும் ஒருவர் ஆணுறை கிங் (condom king) என்று அழைக்கப்படுகிறார்.
  • அவர் மக்களுக்கு இலவசமாக ஆணுறைகளை விநியோகிக்கிறார்.
  • பாலியல் இச்சை, பாலியல் தொடர்பான பிரச்சினைகளுக்காக வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை
Condom King: வீதியில் ஆணுறைகளை விநியோகிக்கும் ஆச்சர்ய நபர்..!!

மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்பது உலகம் முழுவதற்குமான ஒரு முக்கியமான பிரச்சினை. இதற்காக பல நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் இன்னும் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததும், ஆணுறை பற்றிய அறியாமையே இதற்கு முக்கிய காரணம். இதுபோன்ற விஷயங்களை மக்கள் வெளிப்படையாகப் பேசக்கூட விரும்பவில்லை. இன்றும் ஆணுறை பற்றி பேச மக்கள் தயங்குகிறார்கள். 

இந்நிலையில், கென்யாவைச் சேர்ந்த ஒருவர் நாடு முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆணுறைகளை இலவசமாக விநியோகித்து வருகிறார். ஆப்பிரிக்காவில் (Africa) வாழும் ஆணுறை கிங் (condom king) என்று அழைக்கப்படும், அந்த நபர், மக்களுக்கு இலவசமாக ஆணுறைகளை விநியோகிக்கிறார். பாலியல் இச்சை அல்லது பாலியல் தொடர்பான பிரச்சினைகளுக்காக வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ALSO READ | ஹூவர் அணை மீது காற்றில் மிதக்கும் பொருட்கள்; புவிஈர்ப்பு விசை தோற்றுப் போவது ஏன்..!!

2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் 15 முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களில் 33.7% பேர் மட்டுமே ஆணுறைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என அந்நாட்டின் தேசிய சுகாதாரப் புள்ளி விவர அறிக்கை கூறுகிறது. எனவே, ஆணுறைகள் குறித்து மக்களிடையே  நிலவும் அவமான உணர்ச்சியையும், தயக்கத்தையும் மக்களிடம் இருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கென்யாவில் வசிக்கும் ஸ்டான்லி காரா (Stanley Ngara) 'காண்டம் கிங்' என்று பிரபலமானவர். காரா ராஜாவைப் போல உடை அணிந்து, சாலையில் செல்லும் மக்களுக்கு ஆணுறைகளை இலவசமாக விநியோகிக்கிறார். ஸ்டான்லி ஆப்பிரிக்கா மக்களிடையே ஆணுறை பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப விரும்புகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலர் உயிரிழக்கின்றனர். 

'செக்ஸ் வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல' என்று வலியுறுத்தும் காரா, கென்யாவின் தெருக்களில் ஆணுறை மற்றும் எச்.ஐ.வி நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கருக்கலைப்பினால் ஏற்படும் சிரமங்களைப் பற்றியும் விளக்குகிறார். ஆணுறைகளைப் பயன்படுத்துவது வெட்கக்கேடான விஷயம் அல்ல, அதைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News