கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை சீனாவில் 259 ஆக உயர்வு; 11,791 பாதிப்பு

கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை இறப்பு எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 11,791 பேர் பாதிக்கபட்டுள்ளதாக உறுதிப்படுத்தி உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2020, 07:57 AM IST
கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை சீனாவில் 259 ஆக உயர்வு; 11,791 பாதிப்பு title=

07:50 01-02-2020
நாவல் கொரோனா வைரஸ் மூலம் சீனாவில் தற்போது வரை 259 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இதுவரை நாடு முழுவதும் 11791 பேர் பாதிக்கபட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

 

 


பெய்ஜிங்: சீனாவில் நாவல் கொரோனா வைரஸால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. சீன அதிகாரிகள் இதுவரை நாடு முழுவதும் 9,700 பேர் மற்றும் மற்ற 19 நாடுகளில் 100 க்கும் மேற்பட்டவர்கள், இந்த வைரசால் பாதிக்கபட்டு உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் ஸ்கை ராக்கெட் வேகத்தில் பரவி பரவும் தொற்றுநோய்கள் காரணமாக அவசரகால நிலை 1 எச்சரிக்கை 31 மாகாணங்கள், தன்னாட்சி பகுதிகள் மற்றும் அதன் நிலப்பரப்பில் உள்ள நகராட்சிகளுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் தேசிய தலைநகர் பெய்ஜிங் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் SARS நோய் பரவிய போது பயன்படுத்தப்பட்ட 17 ஆண்டு பழைய மருத்துவமனையை புதுப்பித்து வருகிறது.

முகமூடி பற்றாக்குறை:
சீன சுகாதார அதிகாரிகள், 2002-03 தொற்றுநோய்களின் போது SARS ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட சீனாவின் நிலப்பரப்பில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். இப்போதைக்கு, முகமூடி பற்றாக்குறை நாடு தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. தேசிய விடுமுறை காரணமாக, தற்போதைய முகமூடி உற்பத்தி ஒவ்வொரு நாளும் எட்டு மில்லியனுக்கும் அதிகமாக மட்டுமே உள்ளது. இது சாதாரண நாட்களில் 20 மில்லியனாக இருக்கும் என சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. முகமூடி பற்றாக்குறையை தீர்க்க வெளிநாடுகளில் இருந்து வாங்க சீனா முயற்சிக்கிறது.

முழு வீச்சில் நடவடிக்கை.. ஆனாலும் தீவிரம்:
பெய்ஜிங்கில் உள்ள ஏ.ஐ.ஆர் சிறப்பு (AIR Special) நிருபர் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், ஆனால் தொற்றுநோய் சில பிராந்தியங்களில் விரைவாகவும், வேகமாகவும் பரவி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவுதல் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ஹாட்லைன் நம்பர்:
வுஹானில் சிக்கி உள்ள மக்களின் பயத்தையும், தனிமையும் போக்கும் வகையில் மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரு ஹாட்லைன் திறக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் மக்கள் உளவியல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

மருத்துவத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் தொற்றுநோய் தொடர்பான உளவியல் பிரச்சினைகளுக்கு உதவி கோர 4007027520 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம். 24 மணி நேர சேவையை வழங்குவதற்காக அதிகாரப்பூர்வ WeChat கணக்கும் அமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணையம் மற்றும் வர்த்தக அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையில், சீனாவில் குளிர்காலம் என்பதால் காய்கறி இருப்புக்கள் இல்லாத பகுதிகளில், குறிப்பாக சீனாவின் வடக்கு நகரங்களில் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளது. 

தவறான தகவல் பரப்பினால் கடும் தண்டனை:
உணவு விநியோக லாரிகள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கு போக்குவரத்துக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்களை பரப்பும் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூக அமைப்புகளுக்கு கடுமையாக தண்டிக்கப்படும் என்று சிவில் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News