நாட்டின் அதிகரித்து வரும் கோவிட் -19 நிலைமை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், மே 15 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் "இந்தியாவில் கொரோனா வைரஸ் (COVID in India) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை என்பதை நாங்கள் உணர்கிறோம்" என்று கூறினார்.
ALSO READ | வீட்டுக்கு ஒரு விமானம் இருக்கும் விந்தை: அச்சரியப்படுத்தும் அமெரிக்க நகரம்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. கட்டுபாட்டை மீறி கொரோனா வைரஸ் பரவி வருவதால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்வது தொடர்பாக முடிவெடுக்க, இன்று தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, "இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா (Australia) இடையே நேரடி பயணிகள் விமானங்கள் சேவையை மே 15 ஆம் தேதி வரை இடைநிறுத்த செய்வதாக, அந்நாட்டு பிரதமர் தெரிவித்தார். மேலும் வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் சப்ளை, முகமூடிகள், கையுறைகள் மற்றும் முகக் கவசங்களையும் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா அனுப்பும் எனவும் கூறினார்.
ALSO READ | இலவச விமானப் பயணம்: மருத்துவர்கள், செவிலியர்களுக்கு Vistara அளிக்கும் அதிரடி சலுகை
ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் பயணிகள் எண்ணிக்கைக்கு, அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR