தனது காதல் விவகாரத்தை வெளிப்படுத்திய Zee News மீது தாவூத் இப்ராஹிம் நடவடிக்கை!!

இந்தியாவின் most wanted தாவூத் இப்ராஹிம், 1993 மும்பை குண்டு குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர்.  அவரது காதலி பற்றி ஜீ நியூஸ் செய்தி வெளியிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2020, 01:21 PM IST
  • தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் நடிகையுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளதாக DNAவின் பிரத்யேக அறிக்கை தெரிவித்திருந்தது...
  • இந்த செய்தியை ஜீ நியூசுக்கு கொடுத்தது யார் என்று விசாரணையை தாவூத் தொடங்கிவிட்டார்...
தனது காதல் விவகாரத்தை  வெளிப்படுத்திய Zee News மீது தாவூத் இப்ராஹிம்  நடவடிக்கை!! title=

கராச்சி: இந்தியாவின் most wanted தாவூத் இப்ராஹிம், 1993 மும்பை குண்டு குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர்.  அவரது காதலி பற்றி ஜீ நியூஸ் செய்தி வெளியிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்...  

மெஹ்விஷ் ஹயாத் என்ற பாகிஸ்தான் நடிகையுடன் தாவூதுக்கு உறவு குறித்த தகவல்கள் ஜீ நியூஸ்க்கு எவ்வாறு கிடைத்தது என்று தாவூத் விசாரணையைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை மெஹ்விஷ் ஹயாத், தாவூத்தை விட 27 வயது இளையவர், நிழலுலக தாதாவின் மிகப்பெரிய பலவீனம், மெஹ்விஷ் ஹயாத் என்று நம்பப்படுகிறது. தாவூத்தின் பாகிஸ்தான் காதலி 'கேங்க்ஸ்டர் டால்' என்றும் அழைக்கப்படுகிறார்.

பாகிஸ்தானில் ஒரு பெரிய சிவில் கௌரவமான 'Tamga-e-Imtiaz' ஒரு சிறிய கால பாகிஸ்தான் நடிகைக்கு வழங்கப்பட்டபோது, பாகிஸ்தான் திரையுலகத்துடனான தாவூத்தின் உறவு 2019 ல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நடிகையின் பெயர் மெஹ்விஷ் ஹயாத் (37 வயது). மெஹ்விஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அறியப்பட்ட முகம் அல்ல, ஆனால் இப்போது அவர் பாகிஸ்தானின் ஊடகங்கள் மற்றும் கவர்ச்சித் துறையின் பிரபலமான முகமாக மாறிவிட்டார்.

மெஹ்விஷுக்கு 'Tamga-e-Imtiaz' வழங்குவதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவு குறித்து பலர் கேள்வி எழுப்பியதோடு, மெஹ்விஷ் என்ன சாதனை செய்துவிட்டார் என்பதற்காக இவ்வளவு பெரிய சிறப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது பாகிஸ்தான் திரையுலகத்தினர் கேள்வி எழுப்புவதாகவும் கூறப்படுகிறது.  

இந்த விருது வழங்கப்பட்டது திரைத்துறைக்கு மெஹ்விஷ் கொடுத்த பங்களிப்பிற்காக அல்ல, கராச்சியைச் சேர்ந்த ஒரு சக்திவாய்ந்த நபருடனான உறவின் காரணமாகவும், ஆளும் கட்சியுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதாலும் என்றும் ஒரு செய்தி வலைதளம் தெரிவித்துள்ளது. இந்த செய்திக்குப் பிறகு சமூக ஊடகங்களில் மெஹ்விஷ் ட்ரோல் செய்யப்பட்டார்.  இதை, தனக்கு எதிரான சதி என்று மெஹ்விஷ் தற்போது கூறுகிறார்.

மெஹ்விஷ் தனது வாழ்க்கையை ஒரு ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனமாடியதுடன் தொடங்கினார், இந்த ஐட்டம் நம்பர் ஆட்டத்தால் கவரப்பட்ட தாவூத் இப்ராஹிம், அவரை தனது நெருக்கமானவராக்கிக் கொண்டதாக   கூறப்படுகிறது. அதன்பிறகு திரையுலகில் மெஹ்விஷ்ஷின்  அந்தஸ்து அதிகரித்தது. அவர் அரசாங்கத்தின் விவகாரங்களிலும் தலையிடத் தயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 1983 ஜனவரி 6ஆம் தேதியன்று பிறந்த மெஹ்விஷ், தாவூத் இப்ராஹிமை விட 27 வயது குறைந்தவர்.  காதலுக்கு கண்ணே இல்லை என்னும்போது, வயது மட்டும் முக்கியமானதா என்ன?

Also Read | யார் இந்த Mehwish Hayat, மிகவும் தேடப்படும் பயங்கரவாதி தாவூத்தின் காதலியா?

Trending News