தவறான தீர்ப்பால் 43 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த சோகம்..!!

தவறேதும் செய்யாமல் 43 ஆண்டுகள் சிறையில் கழிக்க காரணமான தவறான தீர்ப்பு ரத்து செய்யப்பட்டதால், இறுதியில் ஒரு நிரபராதிக்கு விடுதலை கிடைத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 29, 2021, 11:51 AM IST
தவறான தீர்ப்பால் 43 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த சோகம்..!! title=

கன்சாஸ் சிட்டி (அமெரிக்கா): கொலை வழக்கில் தண்டனை பெற்று 43 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு, தற்போது விடுதலை கிடைத்துள்ளது. இவரது நிலையாஇ அறிந்த மக்கள் 14.5 லட்சம் டாலர்கள் அதாவது சுமார் ரூ.11 கோடி திரட்டியுள்ளனர். அந்த நபர் தவறாக தண்டிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நீதிபதி அவரது தண்டனையை ரத்து செய்தார். இதைத் தொடர்ந்து, மக்கள் நன்கொடை வசூலிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

நன்கொடை சேகரிக்கும் பிரச்சாரம்
மிட்வெஸ்ட் இன்னசென்ஸ் திட்டத்தின் நோக்கம் அப்பாவி மக்களுக்கு உதவுவதாகும். அதில், தவறான தீர்ப்பின் காரணமாக நீண்ட காலம் சிறையில் வாடி வந்த கெவின் ஸ்டிரிக்லேண்டின் (Kevin Strickland) விடுதலைக்காக பிரச்சாரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சிறையில் இளமை காலத்தை தொலைத்தவருக்கு கண்ணியமான வாழ்க்கை வாழ உதவிடும் வகையில், நன்கொடைகளை திரட்ட GoFundMe என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. 62 வயதான ஸ்டிரிக்லேண்ட் மீதமுள்ள காலத்தை கவுரவமாக கழித்திட இந்த பணம் உதவும். தொலைத்த இளமை பருவத்தை திரும்ப பெற முடியாது என்றாலும், இந்த பணம் அவருடையை வாழ்க்கையை எளிதாக்கும்.

ALSO READ | ’மிராக்கிள் மைக்’ தலையில்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல்

1978 வழக்கு
மிசோரி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி செவ்வாயன்று அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். சனிக்கிழமை மாலை வரை, ஸ்டிரிக்லேண்டிற்கு உதவுவதற்காக $14.5 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளன. கெவின்   ஸ்ட்ரிக்லேண்ட் குற்றவாளி என தவறாக தீர்ப்பு வழ்ங்கப்பட்ட வழக்கு குறித்து கூறிய அவர், குறிப்பிட்ட கொலை சம்பவத்தின் போது தான் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருப்பதாகவும், 1978 கொலைகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார். சம்பவம் நடந்த போது அவருக்கு 18 வயது. சிறையில் இருந்து வெளிவந்த அவர், 'கடவுளுக்கு நன்றி' என்றார்.

ALSO READ | கொரோனா வைரசின் புதிய பிறழ்வு ஆபத்தானது! ஆனால் பயணத்தடை அவசியமில்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News