கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் மாரடைப்பால் மரணம்!!

இறந்த பெண்ணின் மரணம் மயோகார்டிடிசின் (இதயம் தொடர்பான பிரச்சனை) விளைவால் நடந்தது என போர்ட் ஒப்புக்கொண்டதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2021, 03:49 PM IST
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் மாரடைப்பால் மரணம்!! title=

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசியான ஃபைசரால் எற்பட்ட முதல் மரணம் பற்றி தெரியவந்துள்ளது. இந்த தகவல் திங்களன்று ஒரு சுயாதீன கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்தின் மறுஆய்வுக்குப் பிறகு சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. எனினும், அமைச்சகத்தின் அறிக்கையில் அந்தப் பெண்ணின் வயது குறிப்பிடப்படவில்லை.

தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பால் மரணம் ஏற்பட்டது

இறந்த பெண்ணின் மரணம் மயோகார்டிடிசின் (இதயம் தொடர்பான பிரச்சனை) விளைவால் நடந்தது என போர்ட் ஒப்புக்கொண்டதாக நியூசிலாந்து (New Zealand) சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை கோவிட்-19 தடுப்பூசியான ஃபைசைரின் அரிய பக்க விளைவாக (Rare Side Effect) பார்க்கப்படுகின்றது.

ALSO READ:COVID-19: கேரளா, மகாராஷ்டிரா அரசுக்கு கடிதம் மூலம் மத்திய அரசு உத்தரவு

மயோகார்டிடிஸ் என்றால் என்ன?

மயோகார்டிடிஸ் (Myocarditis) என்ற இந்த பிரச்சனையால், இதயத்தில் (Heart) உள்ள தசைகளில் வீக்கம் ஏற்படுத்துகிறது. இது இதயத்தின் அமைப்பை பாதிக்கிறது. பொதுவாக இதுபோன்ற நிலையில் இதயத்திற்கு இரத்தத்தை செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இது இதயத்துடிப்பின் ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்தும். இந்த சூழலில் இதய தசைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக பணியாற்ற வேண்டி வருகிறது. இதன் காரணமாக தசைகள் வீக்கம் பெற்று அதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஆக்லாந்தில் இரண்டு வார ஊரடங்கு

கொரோனா வைரஸ் டெல்டா வேரியன்ட் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு இங்கு இரண்டு வார ஊரடங்கு (Lockdown)  விதிக்கப்பட்டுள்ளது.

வேர்ல்டோமீட்டர் தரவுகளின்படி, நியூசிலாந்தில் 3519 பேர் கோவிட் -19 (COVID-19) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்தனர். 2890 பேர் இந்த தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர். நியூசிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ALSO READ: பதுங்கிப் பாய்கிறதா கொரோனா? ஒரே பள்ளியைச் சேர்ந்த 22 குழந்தைகளுக்கு தொற்று உறுதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News