ஹவாய்: அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் உள்ள மவுயி தீவில் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐ நெருங்கும் நிலையில், ஹவாய் அட்டர்னி ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார். பிரபல சுற்றுலா நகரமான லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்ததால் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. அதிக எண்ணிக்கையிலான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.
ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மிகப்பெரிய பேரிடர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்துள்ளார். காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்கு ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பாக ஹவாயின் அட்டர்னி ஜெனரல் ஆனி லோபஸ் வெளியிட்ட அறிக்கையில், மவுய் மற்றும் ஹவாய் தீவுகளில் காட்டுத்தீ ஏற்பட்டது மற்றும் அதற்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பேரழிவு ஏற்படுத்திய காட்டுத் தீயை அதிகாரிகள் எவ்வாறு சமாளித்தனர் என்பது குறித்து விசாரணையைத் தொடங்குவதாகவும் அவர் கூறினார்.
85% தீ அணைக்கப்பட்டது
காட்டுத்தீ காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சடலங்களை தேடும் பணியில் மோப்ப நாய்களுடன் தேடுதல் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. காட்டில் இருந்து நகரத்திற்கு பரவிய Lahaina காட்டுத்தீ, இன்னும் தகித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் 85% கட்டுப்படுத்தப்பட்டது. தீவில் ஏற்பட்ட மற்ற இரண்டு காட்டுத்தீக்களில் ஒன்று 80% மற்றும் மற்றொன்று 50% கட்டுப்படுத்தப்பட்டது என்று அட்டார்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை மேலும் கூறியுள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யாவைப் போலவே போர் தொடுக்கத் தயாராகிறாரா கிம் ஜாங் உன்? அதிர்ச்சித் தகவல்!
காட்டுத்தீ தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அரசு தரப்பில் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், அட்டர்னி ஜெனரல் லோபஸின் விசாரணை தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது. லஹைனா நகரத்தில் உள்ள மக்கள், அரசு தரப்பில் இருந்து தீ பற்றி எந்த எச்சரிக்கையும் வரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, மவுயி தீவின் மேற்குப் பகுதியின் பெரும்பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் இல்லை என்ற நிலையிலும், மாவட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை லஹைனா குடியிருப்பாளர்களை அவர்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கத் தொடங்கினார்கள்.
எரிந்த பகுதிகள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றும் தூசி மற்றும் காற்றில் பரவும் துகள்களை சுவாசிப்பது ஆபத்தானது என்றும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்ததால், மத்திய லஹைனாவை போலீசார் தடை செய்தனர்.
மவுயிக்கு விமானங்கள் ரத்து
காட்டுத் தீ காரணமாக அமெரிக்காவின் பல நகரங்கள் மௌயிக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன. வியாழன் அன்று, யுனைடெட் ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ், மவுயியில் உள்ள கஹுலுய் விமான நிலையத்திற்கான விமானங்களை ரத்து செய்ததாகவும், பயணிகளை பிரதான நிலப்பகுதிக்கு கொண்டு வர, காலி விமானங்களை பறக்க விடுவதாகவும் கூறியது. மீட்புப் பணிகளுக்கு வசதியாக கூடுதல் விமானத்தைச் சேர்ப்பதாகவும், நிலைமையைப் பொறுத்து மேலும் பலவற்றைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
(ஏஜென்சிகளின் உள்ளீடுகளுடன்)
மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் எவ்வளவு தொகை வைத்திருக்க வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ