லண்டன் இந்திய தூதரகம் மீது பாகிஸ்தானியர்கள் கும்பல் வன்முறை தாக்குதல்!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் பாகிஸ்தானியர்கள் போராட்டம்!!

Updated: Sep 4, 2019, 09:38 AM IST
லண்டன் இந்திய தூதரகம் மீது பாகிஸ்தானியர்கள் கும்பல் வன்முறை தாக்குதல்!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் பாகிஸ்தானியர்கள் போராட்டம்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்க்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் நேற்று பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காஷ்மீர் விவகாரத்தினை கையில் எடுத்து கொண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கொடியை ஏந்தியபடி இந்திய தூதரகம் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களுடன் பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள் சிலரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்.

காஷ்மீர் விடுதலை கோஷம் எழுப்பியவாறு இந்திய தூதரகம் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் தூதரக அலுவலக கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும் முட்டை, காலி தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றையும் வீசினர். கண்ணாடி சேதமடைந்த புகைப்படத்தை இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியே இன்று 3 செப்டம்பர் 2019 அன்று மற்றொரு வன்முறை எதிர்ப்பு. வளாகத்திற்கு சேதம் ஏற்பட்டது”. 

இங்கிலாந்தில் இந்தியா மேற்கொண்ட ட்வீட்டுக்கு பதிலளித்த லண்டன் மேயர் சாதிக் கான் வன்முறை போராட்டங்களை கண்டித்து, இது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே ஆகஸ்ட் 15 கிளர்ச்சி விவகாரத்தை  இந்திய தூதரகத்திற்கு வெளியே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் ஒரு தொலைபேசி உரையாடலில் எழுப்பியபோதும் புதிய எதிர்ப்புக்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.