1970 காலகட்டங்களில் ஆசிய முழுவதும் பல்வேறு கொலைகளை செய்து தண்டனை பெற்ற பிரான்ஸ் சைக்கோ கொலையாளி, சார்லஸ் சோப்ராஜ், 19 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று விடுதலை செய்யப்படுகிறார். நேபாள் நாட்டு சிறையில் இருக்கும் அவரை உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, அதிக ஆண்டுகள் தண்டனை ஆகியவற்றின் அடிப்படையில் அவரை விடுதலை செய்து நேபாள உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இவரின் வாழ்வை அடிப்படையாக வைத்து, 'The Serpent'என்ற வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ளது. 70களில் இருபதிற்கும் மேற்பட்ட கொலைகளை செய்ததாக கூறப்படும் சோப்ராஜின் பின்னணி பல பயங்கர தகவல்களை அளிக்கிறது. அவரின் கொலை செய்யும் முறை, கொலை செய்த பின்னர் வழக்கில் இருந்து தப்பிக்கும் வழி ஆகியவை ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.
முதலில் அன்பு, பாசம்... பின்பு கொலை!
பிரான்ஸ் நாட்டில் சோப்ராஜ் சிறுவனாக இருக்கும்போதே மிக மோசமான அனுபவங்களை சந்தித்துள்ளார். அதில் இருந்து பல்வேறு சிறு சிறு குற்றங்களை மேற்கொண்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். பின்னர், 1970 காலகட்ட தொடக்கத்தில் காலகட்டத்தில் உலகம் முழுக்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், ஒருகட்டத்தில் தாய்லாந்து தலைநகர் பட்டாயாவில் தஞ்சம் புகுந்தார்.
இவர் தான் கொலை செய்யப்போகும் நபர்களிடம் முதலில் அன்பாக பேசி நட்பாக்கிக்கொள்வார். பெரும்பாலும் ஆசியாவிற்கு ஆன்மீகச் சுற்றுலா வரும் மேற்கத்தியர்களே இவரால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றவே முதலில் கொள்ளை அடிக்கவும், கொலை செய்யவும் தொடங்கியுள்ளார்.
மேலும் படிக்க | ஹிட்லர் நடத்திய படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்த மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை!
1975ஆம் ஆண்டில் பட்டாயாவின் கடற்கரையில், இளம் அமெரிக்க பெண்ணைதான் சோப்ராஜ் முதலில் கொலை செய்திருக்கிறார். மிகவும் மென்மையான முறையிலும், சௌகரியமான முறையிலும் அந்த கொலையை அவர் செய்ததாக கூறப்படுகிறது. கொலைசெய்யப்பட்ட பெண் பிகினி உடையில் கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பின்னர் ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட கொலை செய்த சோப்ராஜ், பெரும்பாலும் கழுத்தை நெரித்து, அவர்களை அடித்து உடலை எரித்துவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும், தான் கொல்லும் ஆண்களின் பாஸ்போர்டுகளை வைத்து அடுத்த நாட்டிற்கு சென்று தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளார். தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்காக அடையாளங்களை அடிக்கடி மாற்றி வந்துள்ளார். பாம்பு தனது சட்டையை உதிர்த்துவிட்டு செல்வதுபோல, இவரும் தனது அடையாளங்களை மாற்றியுள்ளார். எனவே, ஆங்கிலத்தில் இவருக்கு 'Serpent' (ஆங்கிலத்தில் பாம்பு) என அடைமொழி ஒன்றும் இருந்துள்ளது.
1976 ஆம் ஆண்டில், டெல்லி ஹோட்டலில் ஒரு பிரெஞ்சு சுற்றுலாப் பயணி விஷம் குடித்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அந்த வழக்கு விசாரணையில், சோப்ராஜ் இந்தியாவில் கைது செய்யப்பட்டார். மேலும், அந்த கொலைக்காக அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையின் இடையில், 1986ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பித்தார். இருப்பினும், கோவாவில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். இதனால், சிறை நீட்டிக்கப்பட்டு, 1997ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்து பின் விடுவிக்கப்பட்டார்.
விடுதலைக்கு பின் அவர் பிரான்ஸ் சென்றார். ஆனால், 2003ஆம் ஆண்டில் ஆசியாவின் ஆன்மீக நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் மீண்டும் தோன்றினார். தலைநகர் காத்மாண்டுவின் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்படும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
19 ஆண்டுகளுக்கு பின்...
மேலும், 1975இல் அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிஸ் என்பவரை கொன்றதற்காக அங்குள்ள நீதிமன்றம் அவருக்கு 2004ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. 10 ஆண்டுகள், அதே பிரான்சிஸ் என்பவரின் கனடா நாட்டு நண்பரை கொன்ற குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். 2008 ஆம் ஆண்டு சிறையில், சோப்ராஜ் தன்னை விட 44 வயது இளையவரும், அவரது நேபாள வழக்கறிஞரின் மகளுமான நிஹிதா பிஸ்வாஸை மணந்தார்.
தற்போது 78 வயதாகும் சோப்ராஜ் இந்த இரண்டு கொலை வழக்கில்தான் தற்போது விடுதலையாகியுள்ளார். தொடர்ந்து, அவரை சிறை வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது என்றும் அவர் மீது எந்த வழக்குகளும் வேறெங்கும் நிலுவையில் இல்லையென்றால், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது மட்டுமின்றி, அடுத்த 15 நாள்களில் அவரின் சொந்த நாட்டிற்கு அனுப்பவும் நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க | கடலில் மிதக்கும் நகரம்; ராட்சஸ கடல்மீன் வடிவில் 7000 பேர் வசிக்க கூடிய அதிசய நகரம்!\\
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ