ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்தனர், 43 பேர் காயமடைந்துள்ளனர். வியாழன் அதிகாலை ஏற்பட்ட தீயில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டதாகவும் 43 பேர் காயமடைந்ததாகவும் அவசரகால மேலாண்மை சேவை தெரிவித்துள்ளது. நிவாரண மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் செய்தி தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ
தீயை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தீயில் எரிந்த கட்டிடத்தின் ஜன்னல்களில் இருந்து வெளியேறூம் புகையினால், புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. தென்னாப்பிரிக்காவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான SABC ஜோகன்னஸ்பர்க்கில் அமைந்துள்ள கட்டிடம் ஐந்து மாடிகள் உயரம் கொண்டது என்று கூறியது. தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எஸ்ஏபிசி செய்தி நிறிவனத்தை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ, ஒரு கட்டிடத்தின் தரை தளத்தில் பெரிய ஆரஞ்சு தீப்பிழம்புகளைக் காட்டியது.
தீ விபத்து தொடர்பாக வெளியான வீடியோக்களில், ஏராளமான மக்கள் வெளியே ஓடி வருவதைக் காணலாம். தொடர்ச்சியான ட்வீட்களில், அவசரகால சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி, பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலர் சுகாதார வசதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார். SABC வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ விபத்திற்கு நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மக்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குகிறது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, இந்த கட்டிடத்தில் குறைந்தது 200 பேர் வாழ்ந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க | பெண்ணின் மூளைக்குள் உயிருள்ள புழு! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!
இறந்தவர்களில் குறைந்தது ஒரு குழந்தையும் அடங்கும்
இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என இருப்பதாக செய்தித் தொடர்பாளர் முலாட்ஸி கூறினார். கட்டிடத்தின் சில ஜன்னல்களில் படுக்கை விரிப்புகள் மற்றும் பிற பொருட்கள் வெளியே தொங்கிக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், தீயில் இருந்து தப்பிக்க மக்கள் அவற்றைப் பயன்படுத்தினார்களா அல்லது அவர்கள் தங்கள் சொத்துக்களைக் காப்பாற்ற முயன்றார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட வீடுகளில் தேடு பணியை மேற்கொள்வதில் சிக்கல்
இந்த கட்டிடம் ஒரு 'ஒப்புதலை பெறாத குடியேற்றம்' என்று முலாட்ஸி கூறினார். அங்கு வீடற்ற மக்கள் எந்த முறையான குத்தகை ஒப்பந்தமும் இல்லாமல் வீடு தேடி நகர்ந்தனர். இதனால் கட்டிடத்தில் தேடுதல் பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது என்றார். கட்டிடத்தில் சுமார் 200 பேர் இருந்திருக்க வேண்டும் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் பேரை அனுப்ப திட்டமிடும் எலோன் மஸ்க்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ