காஷ்மீர் மக்களுக்கு பொய்யான தகவலை காட்ட PAK முயற்சி; ஆதரவு அளிக்கும் அப்ரிடி

பாகிஸ்தான் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) ​​மூன்று நிமிடங்கள் காஷ்மீரிகளுக்கு தனது ஆதரவை காட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2019, 09:08 PM IST
காஷ்மீர் மக்களுக்கு பொய்யான தகவலை காட்ட PAK முயற்சி; ஆதரவு அளிக்கும் அப்ரிடி title=

இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாட்டை உலக நாடுகள் கேட்க மறுத்துவிட்டனர். இதனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே பல்வேறு செயல்களைச் செய்து ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பொய்யான தகவலை காட்ட முயற்சிக்கின்றனர். இந்த வித்தையை பிரபலமான தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்களை கொண்டு பரப்பும் முயற்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈடுபட்டு வருகிறார். சமூகத்தில் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய கிரிக்கெட் வீரர்கள் மூலம் பொய்யான தகவலை பரப்பி காஷ்மீரில் கலவரம் ஏற்ப்படுத்தும் வேலையில் இம்ரான் கான் செயல்பட்டு வருகிறார். இந்த தவறான பிரச்சாரத்தை பரப்புவதில் இம்ரான் கானுக்கு தீவிரமாக உதவுகிறார் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி. 

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) ​​மூன்று நிமிடங்கள் காஷ்மீரிகளுக்கு தனது ஆதரவை காட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளது. அதாவது வரும் வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான் மக்கள் மூன்று நிமிடங்கள் நின்று காஷ்மீர் மக்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்துவார்கள் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

பிரதம மந்திரி இம்ரான் கானின் இந்த அழைப்பில் மக்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றும், 'காஷ்மீர் மக்களின் ஒற்றுமைக்கான வலுவான செய்தியை வழங்க வேண்டும்' என்று பாகிஸ்தான் பிரதமரின் தகவல் மற்றும் ஒளிபரப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஃபிர்தோஷ் ஆஷிக் அவான் மக்களிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்சியை குறித்து பேசிய அவான், வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) மூன்று நிமிடங்கள் நின்று காஷ்மீர் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற ஒற்றுமையைக் மக்கள் காட்ட வேண்டும் என்று கூறினார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இதை வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள பிரச்சாரத்தில் அனைத்து மக்களுக்கு சேரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, பிரதமர் இம்ரான் கானின் இந்த வேண்டுகோளுக்கு முழு ஆதரவு அளித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Trending News