அமெரிக்காவின் 400 ஆண்டுகள் பழமையான அழகிய குட்டித் தீவின் சுவாரஸ்ய வரலாறு

உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் போது, ​​பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் 1930 களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், பொருளாதார மீட்சியை ஏற்படுத்தவும் சிறப்பாக செயல்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 6, 2021, 04:59 PM IST
  • அமெரிக்கா 1637 ஆம் ஆண்டில் பிளாக்வெல் தீவை வாங்கியது.
  • 1600 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தீவு முதலில் நெதர்லாந்து மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
  • தீவு தொழில்நுட்ப மையமாகவும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடமாக உள்ளது.
அமெரிக்காவின் 400 ஆண்டுகள் பழமையான அழகிய  குட்டித் தீவின் சுவாரஸ்ய வரலாறு title=

அமெரிக்காவில் உள்ள ரூஸ்வெல்ட் என்னும் தீவின் வரலாறு மிகவும் பழமையானது. இந்த தீவு 1600 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது நெதர்லாந்து மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த நேரத்தில், தீவு பிளாக்வெல் தீவு என்று அழைக்கப்பட்டது. 

இதை அமெரிக்கா 1637 ஆம் ஆண்டில் வாங்கியது. இதன் பின்னர், 1950 ஆம் ஆண்டில், இந்த தீவுக்கு அமெரிக்காவின் 32 வது ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் நினைவாக அவரது பெயரிடப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் போது  சிறப்பாக செயல்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நபர்களில் ஒருவரான பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட். அமெரிக்காவில் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவியில் இருந்தார். 

உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் போது, ​​பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் 1930 களில் பல வங்கிகள் மற்றும் ஏஜென்சிகளுடன் இணைந்து வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், பொருளாதார மீட்சியை ஏற்படுத்தவும் சிறப்பாக செயல்பட்டார்.

ALSO READ | சித்தரவதை முகாமாக இருந்த குவான்தனாமோ சிறை; அமெரிக்கா எடுத்த முக்கிய முடிவு

உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் போது பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அமெரிக்காவை மிகவும் சிறப்பாக வழிநடத்தினார். பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, ஏப்ரல் 1945 இல் அதிபராக பதவியில் இருந்தபோது இறந்தார்.

அவர் நினைவாக பெயரிடப்பட்ட இந்த தீவு தொழில்நுட்ப மையமாகவும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடமாக உள்ளது. ஆனால் இந்த தீவில் இதுவரை தங்குவதற்கான வசதி ஏதும் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அங்கு முதன் முதலாக ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.  ஹோட்டல் திறக்கப்பட்டவுடன், இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

புதிதாக கட்டப்பட்டு வரும் 18 மாடி ஹோட்டலில், மொத்தம் 244 அறைகள், 2,000 புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகம், மற்றும் பல ஆடம்பர வசதிகள் இருக்கும். இப்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தீவில் தங்கி அதன் அழகை ரசிக்க. இந்த தீவு 3.21 கி.மீ நீளத்தில் மிகவும் அழகாக இருக்கிறது.

400 ஆண்டுகள் பழமையான தீவின் முதல் ஹோட்டல்  2021 ஜூன் 1 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்படும்.

ALSO READ | செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News