காயமடைந்தாரா கிம்? வட கொரிய அதிபர் தலையில் கட்டு, காரணம் என்ன?

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ஒரு பொது நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், ஒரு கரும்புள்ளியுடனும், தலையின் பின்புறத்தில் ஒரு கட்டுடனும் காணப்பட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2021, 05:02 PM IST
காயமடைந்தாரா கிம்? வட கொரிய அதிபர் தலையில் கட்டு, காரணம் என்ன? title=

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ஒரு பொது நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், ஒரு கரும்புள்ளியுடனும், தலையின் பின்புறத்தில் ஒரு கட்டுடன் காணப்பட்டுள்ளார். இது அவரது உடல்நலம் குறித்த ஊகங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

NK செய்தி தளத்தின்படி, கிம் ஜாங் உன் ஜூலை 24 முதல் ஜூலை 27 வரை கொரிய மக்கள் இராணுவத்தின் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டார். ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை போர் வீரர்களுக்கான மாநாடு மற்றும் அது தொடர்புடைய பல நிகழ்ச்சிகளிலும் அவர் காணப்பட்டார்.

ஜூலை 24-27-ல் நடந்த ஒரு இராணுவக் கூட்டத்தின் படங்களில் கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) தலையின் வலது பக்கத்தில் காயத்தையும் அதற்கு போடப்பட்டுள்ள கட்டையும் காண முடிகிறது. ஜூலை 27 மற்றும் 29 க்கு இடையில் நடைபெற்ற மற்ற நிகழ்வுகளிலும் இவை காணப்பட்டதாக NK செய்திகள் தெரிவித்தன. சில படங்களில் வட கொரிய தலைவரது தலையின் பின்புறத்தில், கட்டுகள் இல்லாமல் அடர் பச்சை நிற புள்ளிகள் மற்றும் காயங்களையும் காண முடிந்ததாக வலைத்தளம் தெரிவித்தது.

ALSO READ: ஒண்ணா நின்னு கெத்தா சமாளிப்போம்: உறுதி பூண்டன சீனாவும் வட கொரியாவும்

ஜூலை 11 அன்று இசைக்கலைஞர்களுடன் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் புகைப்படங்களில் அவரது தலையின் பின்பக்கத்தை காண முடியவில்லை என்றும், ஜூன் 29 அன்று நடந்த பொலிட்பீரோ கூட்டத்திலும் காயத்திற்கான தடயத்தை காண முடியவில்லை என்றும் என்.கே. செய்திகள் தெரிவித்துள்ளன. வட கொரியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுதும் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் பற்றிய ஆர்வம் எப்போதும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய (South Korea) அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு இன்னும் 40 வயது கூட ஆகவில்லை. இந்த நிலையில், அவர் உடல்நிலை குறித்த சர்ச்சை தொடர்ந்து இருந்து வருவது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

2014 ஆம் ஆண்டில், கிம் தாங்கியபடி நடப்பது காணப்பட்டது. அதன் பிறகு பொது மக்களின் பார்வையிலிருந்து மறைந்த கிம் பின்னர் ஒரு தடியை ஏந்தியபடி திரும்பி வந்தார். 2018 ஆம் ஆண்டில் தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே-இன் உடன் அவர் சென்ற மலையேற்றத்திற்குப் பிறகு, கிம்முக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது போல் தோன்றியது. ஆனால்,. 68 வயதான மூன் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏறினார்.

ஏப்ரல் 15, 2020-ல், கிம் ஜாங் உன்னின் தாத்தாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘தி டே ஆஃப் தி சன்’ என்ற பொது விடுமுறை நாளில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வில் கிம் கலந்துகொள்ளாதது உலக அளவில் பேசுபொருளானது. அவர் அந்த நிகழ்வுக்கு வராததால், அவர் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாக வலுவாக ஊகங்கள் பரவின.

சமீபத்தில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எடை குறைந்து காணப்பட்டார். அப்போதும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.

ALSO READ: நண்பேன்டா? வட கொரியா தென் கொரியா நட்பு: நாடகமா? நடைமுறையில் சாத்தியமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News