திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை மகிழ்விக்கும் மணப்பெண் தோழி...

மணமகனை மகிழ்விக்க மணமகள்; திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை மகிழ்விக்கும் மணப்பெண் தோழிகள்...! 

Last Updated : Oct 19, 2018, 07:43 PM IST
திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை மகிழ்விக்கும் மணப்பெண் தோழி... title=

மணமகனை மகிழ்விக்க மணமகள்; திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை மகிழ்விக்கும் மணப்பெண் தோழிகள்...! 

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 

திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இது போன்று ஒரு இளம் ஜோடிகள் தைகளின் திருமணத்தை விசித்திரமாக செய்து கொண்டுள்ளனர். 

அந்த வகையில், சீனாவில் திருமண நிகழ்ச்சியின் போது, மணமகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களுடைய தோழிகளுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. மணப்பெண் தோழிகளை 'Bridesmaids' என்று அழைப்பதை தான் அவர்கள் கௌரவத்தின் வெளிப்பாடாக பார்கின்றனர். இதனால் வாடகைக்கு கூட அவர்கள் மணப்பெண் தோழிகளை ஏற்பாடு செய்கின்றனர்.

இப்படி ஏற்பாடு செய்யப்படும் பெண்கள், அனைவரையும் கவரும் விதத்தில் படுகவர்ச்சியாக உடை அணிந்துக்கொண்டு வரும் விருந்தினர்களை கவரும் படி தோற்றம் அளிக்கின்றனர். மேலும் இப்படி வரும் பெண்களில் அதிகம் கல்லூரி பெண்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

அந்த மாணவிகள் தங்களுடைய பண தேவைக்காக இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கின்றனர். சில சீன திருமண நிகழ்ச்சிகளில், வரும் விருந்தினர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக மணப்பெண் தோழிகள் அனுப்பி வைக்கப் படுகின்றனர். இதற்காக சில திருமண நிகழ்சிகளில், விலை மாதுக்களை பெண் தோழியாக அழைத்து வரும் அவலமும் அரங்கேறி வருகிறதாம். 

 

Trending News