அகதிகளை பணத்தால் ஏழ்மையான நாடுகளுக்கு விரட்டும் மேற்குலக நாடுகள்

Western Countries and Refugees handling: பணம் கொடுத்து அகதிகளை ஏழ்மையான நாடுகளுக்கு அனுப்பும் மேற்குலக நாடுகளும், அகதிகள் ஒப்பந்தமும்...   

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2022, 11:42 AM IST
  • அகதிகளை பணத்தால் துரத்தும் செல்வந்த நாடுகள்
  • புலம் பெயர்ந்தோரை ஏழ்மையான நாடுகளுக்கு விரட்டும் நாடுகள்
  • அகதிகளின் புலப்பெயர்ச்சி
அகதிகளை பணத்தால் ஏழ்மையான நாடுகளுக்கு விரட்டும் மேற்குலக நாடுகள்  title=

இங்கிலாந்து மற்றும் ருவாண்டா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், கடந்த ஜூன் 14, 2022 அன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அகதிகளை நாடுகடத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி,அகதிகளை அனுப்பும் விமானம் தனது பயணத்தை மேற்கொள்ளவில்லை. மனித உரிமைகள் அடிப்படையிலான சட்ட நடவடிக்கையின் மூலம் இம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த அகதிகள் சிரியா, சூடான், ஈரான் போன்ற போர் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நாடுகளிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தவர்கள் என்பதும் படகு வழியாக வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறு அகதிகளை அனுப்புவதற்காகவும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்காகவும் 142 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1100 கோடி ரூபாய்) ருவாண்டாவுக்கு இங்கிலாந்து அரசு வழங்கியிருக்கிறது.  

இந்த ஒப்பந்தம் மக்கள் உயிர்களுக்கு ஆபத்தை உண்டாக்கி சட்டவிரோதமாக ஆங்கில கால்வாய் வழியாக மக்கள் கடத்தப்படுவதை தடுக்கும் எனக் கூறுயுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். 

TAMILNADU

ஏழ்மையான நாடுகளை அகதிகளை தடுத்து வைப்பதற்கான முகாம்களாக, மேற்குலக நாடுகள் பயன்படுத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே போன்ற கொள்கையை அமெரிக்கா- மெக்சிக்கோ புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு நெறிமுறை மற்றும் அமெரிக்கா - குவாத்தமாலா இடையிலான புலம்பெயர்வு ஒப்பந்தம் பின்பற்றுவதாக அமெரிக்கன் பல்கலைக்கழக்கத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் தசுரீனா சஜ்ஜத் கூறியுள்ளார்.  

கடந்த 1992 முதல் படகு வழியாக வருபவர்களை கட்டாய தடுப்புக் காவலில் வைக்கும் கொள்கையை ஆஸ்திரேலியா பின்பற்றுகிறது. கடந்த 2001 முதல் ஆஸ்திரேலியாவில் படகில் தஞ்சமடைபவர்களை பப்பு நியூ கினியா மற்றும் நவுருத் தீவு நாட்டில் உள்ள முகாம்களுக்கு ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க | போர் என்பது 21ம் நூற்றாண்டில் மிகவும் அபத்தமானது

மேலும், கடந்த 2013ம் ஆண்டு முதல் படகு வழியாக வருபவர்களை இடைமறித்து சொந்த நாட்டுக்கே அகதிகளை/ தஞ்சக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் கொள்கையை ஆஸ்திரேலிய அரசு பின்பற்றி வருகிறது. 

பசிபிக் தீவு நாடான நவுருத்தீவின் 2022-23 வரவு செலவு திட்டத்தின் படி, அந்த நாட்டின் வருவாயில் பாதிக்கும் மேலான தொகை, ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த குடிவரவுத் தடுப்பு முகாமை நடத்துவதிலிருந்து கிடைக்கிறது. நவுருத்தீவின் வருவாய் மதிப்பீடு 250 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அகதிகள் முகாமில் கைகலப்பு: இருவருக்கு கத்திக்குத்து

இந்த நிலையில், 135 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாய் அதாவது சரி பாதிக்கும் மேலான வருவாய்,ஆஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை, தங்கள் நாட்டில் வைத்திருப்பதன் வழியாகவே நவுருவுக்கு கிடைக்கிறது. 

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக படகு மூலம் அகதிகள் ஐரோப்பியாவில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனை தடுக்க இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா பாணியிலான திட்டங்களை லிபியா, மொரோக்கோ, எகிப்து, துனிசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய நாடுகள் கொண்டிருக்கின்றன. 

புலம்பெயர்ந்தோர் வருகையைத் தடுக்கவும் நாடுகடத்தப்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களை உள்வாங்குவதற்காகவும் குறைந்த வருமானம் கொண்ட மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதியுதவியை வழங்குகின்றது. இது வளர்ந்த மேற்குலக நாடுகள் ஏழ்மையான நாடுகளை அல்லது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை அகதிகளை தடுத்து வைக்கும் முகாமாக பயன்படுத்தும் போக்கினை உணர்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News