இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றவர் இவர்தான்!

இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவை சேர்ந்தபெண் டோனி ஆன்சிங் (23) வென்றுள்ளார்.

Last Updated : Dec 15, 2019, 12:26 PM IST
இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றவர் இவர்தான்! title=

இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவை சேர்ந்தபெண் டோனி ஆன்சிங் (23) வென்றுள்ளார்.

கடந்த மாதம் 20ம் தேதி 69வது உலக அழகி போட்டி லண்டனில் உள்ள எக்ஸெல் மையத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதன் இறுதிச்சுற்றில்  ஜமைக்கா, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் தகுதிபெற்றனர்.

உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நேற்று நடந்தது. இதில், ஜமைக்காவின் டோனி ஆன் சிங், பிரான்ஸ் நாட்டின் ஓப்லி மெஸினோ மற்றும் இந்தியாவின் சுமன் ராவ் ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதியில் ஜமைக்கா அழகி டோனி ஆன்சிங் வெற்றி பெற்று, உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மெக்சிகோவை சேர்ந்த வனிசா பொன்சி டி லியான் மகுடம் சூட்டினார். 

பிரான்ஸ் அழகி ஓப்லி மெஸினோ இரண்டாவது இடத்தையும், இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

Trending News