குரங்கு பாக்ஸ் வைரஸ் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஜெர்மனியில் நான்கு வயது குழந்தைக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிக்கப்பபட்ட இருவருடன் வசித்துவந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் கடந்த வாரம் பதின்ம வயதினரிடையே குரங்கு காய்ச்சலின் பரவலை உறுதிப்படுத்தியது. ஜெர்மனியில் இதுவரை 2,900 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே மாதத்திலிருந்து ஐரோப்பாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய்ப்பரவல் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நிலைமையை கண்காணித்து வருவதாக ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் Robert Koch Institute(RKI) தெரிவித்துள்ளது. நோய்ப்பரவலைத் தடுக்க, தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்குவது முக்கியம் என்று கூறியது.
மேலும் படிக்க | சீனாவை தாக்கும் புதிய வைரஸ் தொற்று: லாங்யா நோய்த்தொற்றின் அறிகுறிகள்
40,000 டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசி இருப்பதாகக் கூறிய ஜெர்மன் அரசு, மேலும் 200,000 டோஸ்கலுக்கான ஆர்டர் செய்துள்ளதாக தெரிகிறது.
குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று, அங்கு 9,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த குரங்கம்மை நோயால் பாதிக்கபப்ட்டுள்ளனர்.
நியூயார்க் தற்போது வைரஸின் மையமாக உள்ளது, பெரும்பாலான வழக்குகள் ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆண்கள் சம்பந்தப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
பெருவில் திங்களன்று (2022, ஆகஸ்ட் 8) 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று பதிவாகிய நிலையில், இந்த நோயால் முதல் மரணமும் அங்கு பதிவானது.
மேலும் படிக்க | கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை; பீதியை கிளப்பும் Monkeypox
குரங்கம்மை பாதிக்கப்பட்டதால் இறந்தவரின் வயது 45 என்றும், நாளொன்றுக்கு எட்டு முதல் ஒன்பது பேர் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஆப்பிரிக்காவிற்கு வெளியே உலகளவில் குறைந்தது 78 நாடுகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் குரங்கு பாக்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போது ஐரோப்பாவில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன.
மேலும் படிக்க | இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ