புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
- தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த நாளான இன்று புதுதில்லியில் ராஜ்காட்டில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- கொரோனா வைரஸ் பாதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியை தற்காலிகமாக அமெரிக்க துணை அதிபர் Mike Penceஇடம் ஒப்படைக்க முடியும். 1963 ஆம் ஆண்டில் அப்போதைய துணை அதிபர் கென்னடி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1967 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பின் 25 வது திருத்தத்தின் பிரிவு 3 இன் கீழ், அமெரிக்க அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற இயலாத நிலைமையை எழுத்துப்பூர்வமாக அறிவிக்கலாம். துணை அதிபர் "acting president" என்ற முறையில் பணியாற்றுவார்.
- ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் குடிமக்களுக்காக தங்கள் எல்லைகளை திறக்கவுள்ளன. கோவிட் 19 தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியிருந்தன.
கர்மவீரரை பற்றிய செய்தி இது | கல்விக்கண் திறந்த காமராஜர் கண் அயர்ந்த நாள்
- Nagorno-Karabakh பகுதியில் போர்நிறுத்தத்திற்காக மத்தியஸ்தம் செய்தால் தயார் என ஆர்மீனியா கூறுகிறது
- 'உலகம் முழுவதும் இஸ்லாம் நெருக்கடியில் உள்ளது' என்று பிரான்சு நாட்டு அதிபர் மக்ரோன் கருத்து.
- கப்பலை கொண்டு செல்வதற்கு முன்னதாக புறப்படுவதற்கு தீயணைப்பு பணிக்கான கட்டணத்தை செலுத்துங்கள் என்று தீ விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல் நிறுவனத்துக்கு இலங்கை அறிவுறுத்துகிறது.
- மைக் பாம்பியோ வருகைக்கு முன்னதாக, மங்கோலியாவில் சீனா எதிர்ப்பு போராட்டங்கள் வெடிக்கின்றன
- கொரோனா வைரஸால் ஏழு மாதம் மூடப்பட்டிருந்த மக்கா புனிதத்தளம் மீண்டும் திறக்கப்பட உள்ளது...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR