அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் பெண் ஒருவர் தனது நாயுடன் கோல்ஃப் மைதானத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது முதலை தாக்கி கொல்லப்பட்டார். ஹில்டன் ஹெட் தீவின் ஸ்பானிஷ் வெல்ஸ் பகுதியைச் சேர்ந்த ஹோலி ஜென்கின்ஸ் என்பவர் தான் கொல்லப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டது. இச்சம்பவம் நேற்று (ஜூலை 4) காலை நடந்துள்ளது.
கோல்ஃப் மைதானத்தின் எல்லையில் உள்ள குளத்தின் ஓரத்தில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, அவரின் உடலை முதலை "காவலுக்கு" நிற்பதாக தோன்றியதால், முதலில் அங்கு சென்றவர்கள் சடலத்தை மீட்க சிரமப்பட்டனர். பின்னர் அந்த இடத்தில் இருந்து 10 அடி நீளமான அந்த முதலை பாதுகாப்பாக சென்ற பின் தான் அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.
"அந்த பகுதியில் வசிக்கும் 69 வயதான பெண் குளத்தின் விளிம்பில் காணப்பட்டார், மேலும் அவரை பலமுறை குரல் கொடுத்து அழைத்தும், அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் உடனடியாக மீட்பு முயற்சிகள் தொடங்கப்பட்டன, ஆனால் ஒரு முதலை அங்கு வந்து பெண்ணின் உடலுக்கு காவல் நின்று, அவசர முயற்சிகளுக்கு இடையூறு செய்தது. அந்தப் பகுதியில் இருந்து அந்த முதலை பாதுகாப்பாக அகற்றப்பட்டு, பெண்ணின் உடல் மீட்கப்பட்டது” என்று பியூஃபோர்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனை இன்று நடத்தப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். குளத்திற்கு வெளியே அந்தப் பெண்ணை முதலை தாக்கியதா அல்லது அவள் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. "இது ஒரு வருடத்திற்குள் பியூஃபோர்ட் கவுண்டியில் நடந்த இரண்டாவது அபாயகரமான முதலை தாக்குதல் ஆகும். கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று, 88 வயதான சன் சிட்டி பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் முதலையால் தாக்கப்பட்டார்" என்று காவல்துறை அதிகாரி மேலும் கூறினார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், 88 வயதான பெண் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து முதலையின் தாக்குதலால் தனது உயிரை இழந்தார். அங்கு தோட்ட வேலை செய்து கொண்டிருந்த போது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. அலிகேட்டர் அதே பாணியில் இறந்த உடலைப் காவல் காத்து நின்று வந்தது.
மற்றொரு சம்பவம், கடந்தாண்டு மே மாதத்தில் 58 வயதான பெண், ஒரு முதலையால் கொடூரமாக தாக்கப்பட்டார். அவர் மிருகத்தைத் தொட முயன்றபோது அது அவரைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது, இதன் விளைவாக பலத்த காயங்கள் ஏற்பட்டன.
மேலும் படிக்க | 16 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த பெண் முதலை... ஆண் இல்லாமல் கர்ப்பமான அதிசயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ