புளோரிடா சம்பவம்: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Last Updated : Jun 13, 2016, 11:35 AM IST
புளோரிடா சம்பவம்: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு title=

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் `பல்ஸ்` என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு கேளிக்கை விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 

நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 53 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர் அதிரடிக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த நபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடூரமான இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைபப்பு பொறுப்பேற்றுள்ளது. 

ஆனால், இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்புடன் இருக்கும் தொடர்பு பற்றி எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று அமெரிக்க போலீசார் எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

Trending News