ஜப்பான் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி

கொரோனா வைரஸ் காரணமாக யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 19, 2020, 09:47 AM IST
ஜப்பான் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி title=

கொரோனா வைரஸ் காரணமாக யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு வெளியேயும் வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் வெளிநாடுகள் என 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 

கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.

இதனிடையே கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அந்த கப்பலை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் காலக்கட்டம் இன்றுடன் முடிவடைந்தது. 

இதையடுத்து வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கப்பலில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542  ஆக உள்ளது. 

Trending News