கதிரியக்க நீரை கடலில் கலக்கும் ஜப்பானுக்கு எதிர்ப்பு! உலகம் முழுவதும் போராட்டங்கள்

Protests Against Japan: சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடத் தொடங்கிய ஜப்பானுக்கு கிழக்கு ஆசியா முழுவதும் எழும் எதிர்ப்புகள் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2023, 06:21 AM IST
  • ஃபுகுஷிமா அணுமின் நிலையக் கழிவு நீர்
  • கதிரியக்க தன்மையுடைய மாசுபடுத்தப்பட்ட நீர்
  • சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பான்
கதிரியக்க நீரை கடலில் கலக்கும் ஜப்பானுக்கு எதிர்ப்பு! உலகம் முழுவதும் போராட்டங்கள் title=

ஜப்பான் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியிடத் தொடங்கியது, இது நீர்வாழ் பொருட்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து அண்டை நாடுகளில் கவலையைத் தூண்டியது. இந்த நடவடிக்கைக்கு சீனா, வடகொரியா, தென்கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் விடும் ஜப்பானின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20,000-க்கு அதிகமமான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஃபுகுஷிமா அணுமின் நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மோசமான அந்த இயற்கைப் பேரிடரில், காணாமல் போன ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்த நிலநடுக்கத்தில் சேதமடைந்த அணு உலையில் இருந்த எரிபொருள்களுடன் தொடர்புடைய கதிரியக்க தன்மையுடைய மாசுபடுத்தப்பட்ட நீரை வெளியேற்றும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. ராட்சத தொட்டிகளில் ஜப்பான் சேகரித்து வைத்துள்ள சுமார் 1.3 மில்லியன் டன் அளவிலான சுத்தம் செய்யப்பட்ட கதிரியக்க நீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு செய்தது.

மேலும் படிக்க | சந்திரயான் 3 நிலவில் என்ன செய்யப்போகிறது? அடுத்தகட்டம் என்ன?

இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவிடம் இருந்து பெற்ற ஜப்பான், தற்போது கடலில் நீரை விடத் தொடங்கியுள்ளது. இந்தத் தண்ணீரைக் கடலில் திறந்துவிட்டால், கடலின் தன்மையும், கடல் உணவும் பாதிக்கப்படும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன. 

சீனாவில் போராட்டம்
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியிடும் ஜப்பானின் நடவடிக்கைக்கு கண்டன தெரிவிக்கும் சீனா, ஜப்பானில் இருந்து வரும் அனைத்து நீர்வாழ் பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது. "ஜப்பானின் உணவு மற்றும் விவசாயப் பொருட்களில் கதிரியக்க மாசுபாட்டின் அபாயம் குறித்து சீனா மிகவும் கவலை கொண்டுள்ளது" என்று சீனாவின் சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், "அறிவியல் ரீதியாக ஆதாரமற்ற கூற்றுக்களை" பெய்ஜிங் பரப்புவதாக ஜப்பான் பதிலளித்துள்ளது.

ஜப்பானிய மீன்பிடி குழுக்களின் எதிர்ப்பு
ஜப்பானின் தற்போதைய முடிவால் எழுந்திருக்கும் நீர் பாதுகாப்பு பற்றிய அச்சங்கள் தொழில்துறையில் உள்ள நல்ல பெயரை கெடுத்துவிடும் என்று ஜப்பானிய மீன்பிடி குழுக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகியவை ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்ய திட்டமிட்டுள்ளதால், ஜப்பானின் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சந்திரயான் 3 நிலவில் என்ன செய்யப்போகிறது? அடுத்தகட்டம் என்ன?

தென் கொரியாவில் போராட்டங்கள் வெடித்தன
தென் கொரியாவின் சியோலில் உள்ள ஜப்பானிய தூதரகத்த்தில் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றபோது, குறைந்தது 16 ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால், ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதால் மக்களிடையே எழுந்துள்ள பீதியை கவனத்தில் கொண்டு, பொதுமக்களின் கவலைகள் தணியும் வரை ஜப்பானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று பிரதமர் ஹான் டக்-சூ குறிப்பிட்டார்.

வடகொரியா எதிர்ப்பு
ஜப்பான், கடலில் கதிரியக்க நீரை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வட கொரியா கேட்டுக் கொண்டுள்ளது. வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நீர் வெளியேற்றம் என்பது, "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" என்று முத்திரை குத்தியது. "மனிதகுலத்தின் உயிர்கள், பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கடுமையாக அச்சுறுத்தும் கதிரியக்க கழிவுநீரின் அபாயகரமான வெளியீட்டை ஜப்பான் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
தைவான்
முடக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் அகற்றும் நிலையில், தைவானைச் சுற்றியுள்ள நீரை உன்னிப்பாகக் கண்காணிக்கும் நோக்கத்தை அறிவித்தது. AEC இன் திட்டங்களில் தரவு சேகரிப்புக்கான அமைச்சகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, கடல் கதிர்வீச்சு அளவை விழிப்புடன் கண்காணிப்பது மற்றும் கதிரியக்க கழிவுநீரின் பரவலின் அளவை மதிப்பிடுவதற்கான மாதிரியை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | சந்திரயான் 3 விண்கலத்தை வைத்து காண்டம் விளம்பரம்..! அதிர்ச்சியில் மக்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News