அமெரிக்காவின் மாநில செயலாளராக ரெக்ஸ் டில்லர்சன் தேர்வு

அமெரிக்காவின் புதிய மாநில செயலாளராக ரெக்ஸ் டில்லர்சனை, அமெரிக்க நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

Last Updated : Dec 13, 2016, 12:11 PM IST
அமெரிக்காவின் மாநில செயலாளராக ரெக்ஸ் டில்லர்சன் தேர்வு title=

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய மாநில செயலாளராக ரெக்ஸ் டில்லர்சனை, அமெரிக்க நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் வருகிற ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ளார்.

தனது தலைமையிலான ஆட்சியில் இடம்பெறவுள்ள மந்திரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய மாநில செயலாளராக ரெக்ஸ் டில்லர்சன் என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்காவின் மிக பிரபலமான தொழிலதிபரும், எக்ஸான் மொபைல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரெக்ஸ் டில்லர்சன். 

இவர் இதற்கு முன்னர் ஹிலாரி கிளிண்டனும் தற்போது ஜான் கெர்ரியும் வகித்துவரும் அமெரிக்க மாநில செயலாளர் பதவியை டிரம்ப் ஆட்சியின்கீழ் நிர்வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News