கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பண்டிட் லூசி சிகபன் (Lucy Sigaban) என்பவர் இந்துக் கடவுளான விஷ்ணுவைப் பற்றி எழுதியுள்ள புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நூல் இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினரிடையேயும் பிரபலமடைந்துள்ளது என்பது சிறப்பு. தென்னாப்பிரிக்கா மக்களுக்கும், குறிப்பாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தைப் படிக்கத் தெரியாத இந்து இளைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில், விஷ்ணுவின் 1,000 நாமங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
'விஷ்ணு சஹஸ்ரநாமம்'
பண்டிட் லூசி சிகாபன் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு 'விஷ்ணு - 1,000 நாமங்கள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ஏழு வருடங்கள் 'விஷ்ணு சஹஸ்ரநாமம்' படித்த அவர், பிறகு தனது எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சிக்பன், '2005ல் எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை இல்லாமல் மிகவும் கஷ்டத்துடன் காலம் கழித்தேன். கடனை கட்ட முடியாததால் எனது காரை வங்கி திரும்ப வாங்கிக் கொண்டது. என் மகன்கள் நிதாய் மற்றும் கவுரா குழந்தைகளாக இருந்த நிலையில் அவர்களை வளர்க்கவும் நாம் பெரும் பாடு பட்டேன். அது மிகவும் கடுமையான காலகட்டம்.
ALSO READ | சிறுகோள் மீது NASA - SpaceX ஏவும் விண்கலம்; பூமிக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படுமா..!!
'கடவுள் நம்பிக்கையை இழக்கவில்லை'
‘கடினமான காலங்களில் ஒருவர் நம்பிக்கை இழக்க வேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள். கடவுளை நம்புபவர்கள் வாழ்க்கையில் தோற்க மாட்டார்கள் என்பது எனது ஆழமான நம்பிக்கையாக இருந்தது. நானும் அவ்வாறே செய்தேன். சத்யநாராயண விரதம் இருந்தால், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என நம்பினேன்’ என சிக்பென் கூறுகிறார். இந்தியாவில் பயிற்சி பெற்ற சிக்பன், ஜோகன்னஸ்பர்க் பிராந்தியத்தில் உள்ள இந்து சமூகத்திற்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூக-பொருளாதார குழுக்களுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார். பல்வேறு பூஜைகள் முதல் இந்து சடங்குகள், திருமணங்கள் என்பதோடு இறுதிச் சடங்குகளையும் செய்து வைக்கிறார்.
அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட விழா
ஜோகன்னஸ்பர்க்கிற்கு தெற்கே உள்ள இந்திய குடியேற்றமான லெசியாவில் உள்ள துர்கா கோயிலுக்குள் பண்டிட் லூசி சிக்பனின் புத்தக வெளியீட்டு விழாவில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் பாரம்பரிய ஆப்பிரிக்க மத சமூகங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதற்கிடையில், ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் உள்ள மதநல்லிணக்கத்துறை தலைவரான மெஷெக் டெம்பே, சிக்பனின் முற்போக்கான அணுகுமுறை மூலம் சமூக மற்றும் மத ஒற்றுமையை ஏற்படுகிறது என பாராட்டினார்.
ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR