திவால் நிலையை அறிவித்த அரசு: இலங்கை வாங்கியுள்ள கடன் விவரம் என்ன?

Sri Lanka Economic Crisis: அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நிலை மோசமடைந்து வருகிறது. ஒரு வருடத்திற்குள் இலங்கை மீதான மொத்தக் கடன் 1600 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2022, 11:06 AM IST
  • இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
  • பொருளாதார நெருக்கடியால் குழப்பமடைந்த இலங்கை, ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது.
  • இலங்கை தங்கள் நாடு திவாலானதாக அறிவித்துள்ளது.
திவால் நிலையை அறிவித்த அரசு: இலங்கை வாங்கியுள்ள கடன் விவரம் என்ன?  title=

இலங்கை பொருளாதார நெருக்கடி: அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் இலங்கை ஒரு பெரிய முடிவை எடுத்து, தங்கள் நாடு திவாலானதாக அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 51 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த முடியாது என இலங்கை அறிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் வழங்கிய தகவல்
ஒரு வருடத்திற்குள் இலங்கை வாங்கிய கடன் மொத்தமாக 1600 கோடி டாலர் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 2021 இல், இலங்கையின் மொத்தக் கடன் 3500 மில்லியன் டாலராக இருந்தது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5100 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், தெற்காசிய நாடான இலங்கைக்கு கடன் கொடுத்த வெளிநாட்டு அரசாங்கங்கள் உட்பட கடன் வழங்கிய அனைத்து அமைப்புகளும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் தமது வட்டிக் கொடுப்பனவுகளில் ஏதேனும் ஒன்றை பணமாக மாற்றவோ அல்லது இலங்கை ரூபாயில் செலுத்தவோ தெரிவு செய்யலாம் என இலங்கையின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடன் விவரங்கள் என்ன? 
இப்போது இலங்கை யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்ற விவரங்களை காணலாம். இலங்கை சீனாவிடமிருந்து சுமார் 15 சதவிகித கடனை வாங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக சந்தையிலிருந்து 47 சதவிகித கடன் எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பேச்சுவார்த்தைக்கான இலங்கை அரசின் அழைப்பை நிராகரிக்கும் போராட்டக்காரர்கள் 

இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13 சதவீதமும், உலக வங்கியிடமிருந்து 10 சதவீதமும், ஜப்பானிடமிருந்து 10 சதவீதமும், அண்டை நாடான இந்தியாவிடமிருந்து 2 சதவீதமும் கடன் பெற்றுள்ளதோடு, மற்ற இடங்களிலிருந்து 3 சதவீத கடனை பெற்றுள்ளது. 

இலங்கை அரசாங்கம் பல இடங்களிலிருந்து முதலில் கடனைப் பெற்றுக்கொண்டது. ஆனால், தற்போது திரும்பிச்செலுத்தும் நேரம் வரும்போது, அதன் கருவூலத்தில் ஒன்றும் மிஞ்சவில்லை. இலங்கையில் மக்கள் வீதியில் அவதிப்படுகிறார்கள். மகக்ளுக்கு எதிர்கட்சி ஆதரவாக உள்ளது. இவ்வாறான நிலையில் ஆளுங்கட்சியின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான கட்டத்தில் இலங்கை

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட மிக அதிகமாக இருந்தது. 2020 ஆம் ஆண்டில், இலங்கையின் தனிநபர் வருமானம் சந்தை மாற்று வீதத்தின் படி ஆண்டுக்கு 4053 டாலர் ஆகவும், வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் ஆண்டுக்கு 13,537 டாலராகவும் இருந்தது. அதாவது அந்த நேரத்தில் இந்தியாவை விட இந்த அளவுகள் மிக அதிகமாக இருந்தன. 

மனிதவள அபிவிருத்தி அறிக்கையின் அடிப்படையிலும் 2020 இல் இலங்கையின் நிலை இந்தியாவை விட சிறப்பாக இருந்தது. ஐக்கிய நாடுகளின் மனிதவள அபிவிருத்தி அறிக்கை 2020 இல், இலங்கை 72 வது இடத்தில் இருந்தது, அதே நேரத்தில் இந்தியாவின் இடம் 131 ஆக இருந்தது. ஆனால் அதன் பின் நேரம், சூழல் எல்லாம் மாறியது. சீனா-விடம் சிறிது சிறிதாக வாங்கிய கடன் புதைகுழியாக மாறி இலங்கை அதில் முழுவதுமாக சிக்கிக்கொண்டது. இன்று இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து திவால் நிலைக்கு வந்துவிட்டது. 

மேலும் படிக்க | இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPLல் இருந்து விலக வேண்டும்: அர்ஜுன ரணதுங்க 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News