ஆப்கான் பஞ்சஷீர் பகுதி தாலிபான்கள் கையில் சிக்குமா; வலுக்கும் போராட்டம்..!!

ஆப்கானிஸ்தானின் பெரும் தாலிபான் வசம் வந்துள்ள போதிலும், பஞ்சஷீர்  பகுதியை இன்னும் தாலிபான்களால் கைபற்ற முடியவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 3, 2021, 04:08 PM IST
ஆப்கான் பஞ்சஷீர் பகுதி தாலிபான்கள் கையில் சிக்குமா; வலுக்கும் போராட்டம்..!! title=

காபூல்:  ஆப்கானிஸ்தானின், பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபான்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள்பஞ்ஷிர் பள்ளத்தாக்கை சுற்றி வளைத்ததை அடுத்து, கடுமையான குண்டுவீச்சு நடந்தது.  தாலிபான்களிடம் இப்போது அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் உள்ள போதிலும் அவர்களால் பஞ்சஷீரை  கைப்பற்ற முடியவில்லை.

தாலிபான்களுக்கும் பஞ்சஷீரில் உள்ள போராளிகளுக்கும் இடையிலான இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாஷிர் கிளர்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர்கள் தலிபான்கள் (Taliban) மீது ராக்கெட்டுகளை வீசுவதை காணமுடிகிறது.

கடந்த மூன்று நாட்களில் பஞ்சஷிர் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல்களில் தாலிபான்கள் படுதோல்வியை சந்தித்தனர். இதன் பின்னர், வியாழக்கிழமை மாலை தாலிபான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய பிறகு, தாலிபான்கள் பஞ்ச்ஷீரைப் பிடிக்க முயன்று வருகின்றனர். 

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் இது கூறுகையில், தங்கள் போராளிகள் பஞ்சஷீரில் நுழைந்து சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர் என்றார். ஆனால், தலிபான்களின் மூன்று தாக்குதல்களும் தோல்வியடைந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன. 

ALSO READ | Haibatullah Akhunzada: இவர் தான் ஆப்கானின் சுப்ரீம் லீடர் என அறிவித்த தாலிபான்

முன்னணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பஞ்சஷீர் போராளிகள் அதிக எண்ணிக்கையிலான தலிபான்களைக் கொன்றனர் என்று கூறியதோடு, இப்பிரச்சினையை போர் மூலம் தீர்க்க முடியாது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று  கூறினார். இருப்பினும், இரு தரப்பினரும் தங்கள் கூற்றை ஆதரிக்கும் உறுதியான ஆதாரங்களை இதுவரை கொடுக்கவில்லை. தலிபான்கள் பஞ்சஷீர் எல்லா பக்கங்களிலிருந்தும் சூழப்பட்டிருப்பதாகவும், அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு வெற்றி சாத்தியமில்லை என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், ஆயிரக்கணக்கான துருப்புகள் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் சரண்டைந்த நிலையில், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு, பஞ்சஷீர் பகுதியை இன்று வரை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முடியவைல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: ஆப்கானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்; அடுத்தது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News