என்எஸ்ஜி-ல் ஆதரவு அளித்தமைக்கு நன்றி - பாகிஸ்தான்

Last Updated : Jun 23, 2016, 04:43 PM IST
என்எஸ்ஜி-ல் ஆதரவு அளித்தமைக்கு நன்றி - பாகிஸ்தான்  title=

என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக சீனா ஆதரவு அளித்ததற்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்து உள்ளது.

48 நாடுகளை கொண்ட என்.எஸ்.ஜி. என்னும் அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தில் இந்தியா சேருவதற்கு விண்ணப்பித்துள்ளது. இதே போன்று பாகிஸ்தானும், அந்த அமைப்பில் சேர விண்ணப்பித்திருக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தருகிறது. அத்துடன் பிற நாடுகளின் ஆதரவையும் கேட்டு வருகிறது. இந்த விஷயத்தில் அணு ஆயுதப்பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத நாடு என்ற வகையில், இந்தியாவை என்.எஸ்.ஜி.யில் சேர்க்கக்கூடாது என்று சீனா கூறி வருகிறது.

இந்த உடன்பாட்டில் பிரான்ஸ் கையெழுத்திடாமல் உறுப்பினராக சேர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, இந்தியாவும் தனக்கு அப்படி ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தில் இந்தியாவை சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என சீனா பிடிவாதம் பிடிக்கிறது. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருமனதாக முடிவெடிக்க வேண்டும் என்பதால் இந்தியா உறுப்பினர் ஆவது தொடர்பாக தொடர்ந்து கேள்விகுறி எழுந்து உள்ளது. இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ள அமெரிக்கா, பிற நாடுகளும் ஆதரவு அளிக்க கேட்டுக் கொண்டு உள்ளது. பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவை பெறுவதில் தோல்வியடைந்துவிட்டது. 

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ப்பதற்காக தாஷ்கண்ட் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதே மாநாட்டில் கலந்து கொள்ள வரும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசுகிறார். 

இன்று தாஷ்கண்டில் பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹூசைன், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது என்.எஸ்.ஜி.யில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தமைக்கு ஜி ஜிங்பிங்கிடம் தந்து நன்றியை தெர்வித்துவிக்கொண்டார். 

Trending News