புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் தென் அட்லாண்டிக் தீவான ஒயாசிஸ் மீது மோதிக் கொண்டிருக்கின்றன. இது பெங்குவின், சீல் மற்றும் கிரில் உள்ளிட்ட பிற வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ளது. ஜூலை 2017 இல் அண்டார்டிகாவில் உள்ள அண்டார்டிகா (Antartica) லார்சன் சி ஐஸ் ஷெல்பில் (Antarctica Larsen C Ice Shelf ) இருந்து உடைந்த ‘A68a’ பனிப்பாறை, தற்போது தெற்கு ஜார்ஜியாவின் பிரிட்டிஷ் ஜார்ஜியா பிரதேசத்திலிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிலோமீட்டர் என்ற வேகத்தில் வளர்ந்து வரும் இந்த பனிப்பாறை உலகிற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்
4,700 சதுர கிலோமீட்டர் (1,815 சதுர மைல்), அதாவது, தெற்கு ஜார்ஜியாவை விட பெரிய பரப்பளவில் காணப்படும் இந்த பனிப்பாறை (ice berg) தற்போதைய வழியியே தொடர்ந்தால், எந்த நேரத்திலும் தீவின் கரையை எட்டும். இது வரும் ஆண்டுகளில் வனவிலங்குகளின் பேரழிவிற்கு காரணமாக இருக்ககூடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இந்த பனிப்பாறை மன்ஹாட்டனை விட 80 மடங்கு பெரியது.
பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (பிஏஎஸ்) ஆய்வை மேற்கொண்ட மூத்த பேராசிரியர் ஜெரண்ட் டார்லிங் கூறுகையில், பனிப்பாறைகள் காரணமாக சீல் மற்றும் பெங்குவின் உணவை உண்ண நிலப்பகுதிக்கு வருவதற்கு பெரும் தடையாக இருக்கும். உணவு நிலத்தை அடைவதைத் தடுக்கலாம். வனவிலங்குகள் உணவின்றி, பல ஆண்டுகள் தீவில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படலாம் என்று அவர் கூறினார். இது கடல் வாழ் உயிரினங்கள் அழிய காரணமாக இருக்காலாம் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
தற்போது மணிக்கு 1 கிலோமீட்டர் வேகத்தில் வளர்ந்து வரும் இந்த பனிப்பாறை மூன்று முதல் நான்கு வாரங்களில் தென் ஜார்ஜியா மற்றும் அண்டை நாடான தெற்கு சாண்ட்விச் தீவுகள் ஆகியவற்றை அடைந்து அங்குள்ள லட்சக்கணக்கான, சீல்கள், நீர் திமிங்கலங்கள் மற்றும் பிற மீன்களின் உயிர்களுக்கு பேராபத்தை உருவாக்கும் என வல்லுநர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது, உலகளாவிய காலநிலையையும் பாதிக்கும். ஏனெனில் கடல் உயிரினங்கள் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு சமநிலையை பராமரிக்கிறது. வனவிலங்குகள் அழிந்தால், இந்த சமநிலை பாதிக்கப்பட்டு, வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | கர்தார்பூர் குருத்வாரா கட்டுப்பட்டை ISI வசம் ஒப்படைத்துள்ள பாகிஸ்தான்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR