மின்னல் வேகத்தில் காரை இயக்கும் ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் பலி

உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்த ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!!

Last Updated : Aug 29, 2019, 02:36 PM IST
மின்னல் வேகத்தில் காரை இயக்கும் ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் பலி title=

உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்த ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸிகா ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் வல்லவர். இதன் காரணமாகவே உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் என பெயர் பெற்றவர்.

ஜெஸிகா கடந்த 2013 ஆம் ஆண்டு 398 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 483 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி தனது சாதனையை தானே முறியடித்தார்.  அந்தச் சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்பதற்காக ஜெஸிகா கோம்ப்ஸ் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அதற்காக ஜெஸிகா கோம்ப்ஸ் தென்மேற்கு ஓரேகான் பகுதியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியதில் ஜெஸிகா உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 

ஒரு பக்கம் வாகனங்களில் செல்பவர்களுக்கு அதிவேகமாக செல்ல வேண்டாம் என அறிவுரை கூறிவிட்டு மற்றொரு பக்கம் விமானத்திற்கு பயன்படுத்தப்படம் எஞ்சினை கொடுத்து காரை ஓட்டி சாதனை படைப்பத எதற்காக? பரலோகம் செல்லவா? இதுபோன்ற சம்பவங்களால் சாதனை முயற்சி என்ற பெயரில் பல பேர் தங்களது இன்னுயிரை மாய்த்துள்ளனர். 

 

Trending News