அமெரிக்க தேர்தல்: 46.2 மில்லியன் வாக்குகள் பதிவு!

உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று முடிந்தது. வாக்களிப்பு முடிவடைந்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த மாநிலத்துக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.

Last Updated : Nov 8, 2016, 05:41 PM IST
அமெரிக்க தேர்தல்: 46.2 மில்லியன் வாக்குகள் பதிவு! title=

அமெரிக்கா: உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று முடிந்தது. வாக்களிப்பு முடிவடைந்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த மாநிலத்துக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் யார் வெற்றி பெறுகிறார் என்பதை அமெரிக்க ஊடகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கும். குடியரசுக் கட்சிக்கு சிவப்பு நிறமும், ஜனநாயகக்கட்சிக்கு நீல நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கலரும் வெற்றி பெரும் போது அமெரிக்க வரைபடத்தில் நிரப்பப்படும். இதன் மூலம் யார் எந்த மாநிலத்தைக் கைப்பற்றியிருக்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்ளலாம். முடிவுகள் வெளி வரும் வரை ஊதா நிறத்தில் இருக்கும்.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அதிபராக உள்ள பராக் ஒபாமா வின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் 45_வது அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

 

Trending News