மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும். எல்லையில்லாத தேசம் தேசமே கிடையாது என டிரம்ப் அறிவிப்பு
மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ ஈடுசெய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
தற்போது ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர், அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் 3,200 கிலோ மீட்டர் தொலைவில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்தார். டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கூறியதாவது:- எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படுவதில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது. மேலும் எல்லையில் சுவர் கட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை என்னை வருத்தத்துக்கு ஆளாக்கி உள்ளது. இது நம்மை சேர்ப்பதற்கு பதிலாக பிரித்து விடும் என அவர் கூறியுள்ளார்.