லடாக்கில் இந்தியா சீனா எல்லைப் பகுதியான LAC-யில் சீனா தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது. இது போதாதென்று சீனா சமீபத்தில் ஒரு புதிய கதையை சொல்லி வருகிறது.
சீனா சமீபத்தில் COVID-19 தொற்று இந்தியாவில் தோன்றியதாகக் கூறியது. இப்போது, இன்னும் ஒரு படி மேலெ சென்று சீன அரசாங்கம் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த பிரம்மபுத்ரா ஆற்றில் ஒரு பெரிய அணையை கட்ட முயற்சிக்கிறது.
அர்த்தமற்ற இந்த முடிவுகளை எடுக்க சீனாவை கட்டாயப்படுத்துவது என்ன? அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பிடன் நிர்வாகமும், சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றுவதாகக் கூறியுள்ள ஜனநாயகக் கட்சித் தலைவரின் வாக்குறுதியும் பெய்ஜிங்கைத் தூண்டிவிட்டுள்ளதா?
அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பெரும்பான்மையான பிரச்சினைகளில் வேறுபடுகிறார்கள் என்றாலும், இரு கட்சிகளிலிருந்தும் தலைவர்களும் ஒரு விஷயத்தில் உடன்படுகிறார்கள். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) கீழ் சீனா தன் ஆக்கிரமிப்பு கொள்கைகள் காரணமாக உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று அவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்கத் தலைவர்களின் இந்த எண்ணம் பெய்ஜிங்கிற்கும் தெரியும். மேலும் உள்வரும் அமெரிக்க அதிபர் அதிபர் ஜோ பிடனை சீன அதிபர் எவ்வாறு கையாள்வார் என்பதில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.
நவம்பர் 3 ஆம் தேதி நடந்த அமெரிக்க தேர்தலில் பிடன் (Joe Biden) வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்னர் சீன அதிபர் ஷி பல நாட்கள் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவோடு சீனாவை கட்டுப்படுத்த பிடென் நிர்வாகம் உத்திகளை வகுத்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ALSO READ: பிரம்மபுத்ராவில் அணைகட்ட சீனா திட்டம்... இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!
புதிய அமெரிக்க வெளியுறவு செயலாளராக ஆண்டனி பிளிங்கனை நியமிக்க ஜோ பிடன் எடுத்த முடிவு, அவர் புது தில்லியுடன் (New Delhi) நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறார் என்ற தெளிவான செய்தியை அனுப்புகிறது. பலமான நிலையில் இருந்து சீனாவை கையாள்வதில் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இருக்க வேண்டும் என்ற தனது கருத்தை பிளிங்கன் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
பெய்ஜிங்கின் விரிவாக்க கொள்கைகளுக்கு எதிராக பிடன் நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதற்கான தெளிவான செய்தியை பிளிங்கனின் அறிக்கை வெளிப்படுத்துகிறது. பிடென், தனது பிரச்சாரத்தின்போது ஜி மீது ஒரு நேரடி தாக்குதலைத் தொடங்கினார்.
சில காலமாக தொடர்ந்து நடந்து வரும் எல்லைப் பிரச்சனையில் சீனாவுக்கு (China) எதிராக இந்தியாவை ஆதரித்தார்.
ALSO READ: Corona Virus உருவானதே இந்தியாவில்தான்: சீனா கூறும் அடுத்த கதை
ஜோ பிடனின் கீழ், சீனா இந்தியா இடையிலான உறவுகள் மேம்படாது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், சீன வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுடன் உறவுகளை சரிசெய்ய முயன்றது. அமெரிக்காவுடன் எந்த மோதலும் இல்லை என சீனா அறிவித்தது.
LAC-யில் பதற்றம் இன்னும் அதிகமாக உள்ள நிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வலுவான சீன எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி சீனாவுக்கு தேவையான பாடத்தை கற்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR