புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு உணவு உண்பது என்பது எப்போதுமே சவாலானது தான். உலர் பழங்கள், பெரும்பாலும் திரவ நிலையிலான உணவு வகைகளே விண்வெளி வீரர்களுக்கு பிரதானமாக வழங்கப்படுகிறது. புவியீர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் இந்த உணவை சாப்பிடுவது என்பது மற்றொரு சவால். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி வீரர் ஒருவர், விண்வெளியில் சாப்பிடும் வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி வீரர் சுல்தான் அல்-நியாடி 6 மாதங்களாக விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். விண்வெளி பயணத்தின் போது அவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விண்வெளி வீரர்கள் எப்படி உணவு உண்கிறார்கள் என்பதை அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவில், அவர் தேன் தடவிய ரொட்டியை சாப்பிடுவதைக் காணலாம். வீடியோவைப் பகிரும் போது, அவர் அதன் தலைப்பில், ‘விண்வெளியில் தேனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்னிடம் எமிராட்டி தேன் மீதம் உள்ளது, அதை நான் அவ்வப்போது சாப்பிடுகிறேன். இதன் நன்மைகள் பல நிறைந்தது. இது விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது’ என பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் இரண்டு விண்வெளி வீரர்களில் ஒருவரான நியாடி, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 மாத விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது விண்வெளிப் பயணத்தின் போது, அவர் தேன் பாட்டிலைத் திறந்து அதிலிருந்து ரொட்டியில் தேனைப் தடவுவதைக் காணலாம். இதன் போது, விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், பாட்டிலை தலைகீழாக மாற்றாமல், நேராக வைத்துள்ளனர். அப்போது தான் பாட்டிலை அழுத்தினால் வெளியாகும் தேன் வெளியே வந்து ரொட்டியில் ஒட்டிக்கொள்கிறது. இதன் போது ரொட்டியையும் அதனுடன் இணைந்த தேனையும் பலமுறை காற்றில் மிதப்பதையும் காணலாம். அவை அனைத்தும் கீழே விழாமல் காற்றில் தொடர்ந்து மிதக்கின்றன.
மேலும் படிக்க | சாதனை படைக்க நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3... நாடு முழுவதிலும் பிரார்த்தனைகள்!
வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:
Have you ever wondered how honey forms in space?
I still have some Emirati honey left that I enjoy from time to time. Honey has many benefits, especially for the health of astronauts. pic.twitter.com/RrjQYlNvLD— Sultan AlNeyadi (@Astro_Alneyadi) August 20, 2023
வைரலாகும் இந்த வீடியோ அல்-நியாடியின் அதிகாரப்பூர்வ கணக்கான @Astro_Alneyadi இலிருந்து பகிரப்பட்டது. இந்த வீடியோவை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் பலர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் தனது பதிவில், 'இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, எனது உணவை விண்வெளியில் கீழே போட்டு விடலாம், அதனால் அது கீழே விழாது என்று எனக்குப் புரிந்தது, இது மிகவும் அருமையாக இருக்கிறது. மற்றொரு பயனர், 'சுல்தான், விசித்திரமான கேள்வி ஆனால், புவியீர்ப்பு உங்களுக்கு பிடிக்குமா? நீங்கள் தவறவிட்டீர்களா?' என வேடிக்கையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
விண்வெளி வீரர்கள் பிரபஞ்சத்தின் தொலை தூரத்தில் உயிர் வாழ்வதற்கு கவனமான உணவு தேவைப்படுகிறது. ஆறு மாத காலம் போன்ற குறுகிய கால விண்வெளிப் பயணத்துக்கு இப்போதுள்ள உணவு முறை ஓரளவு போதுமானதாக உள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில், ஆண்டுக்கணக்கில் நீளும் விண்வெளி பயணத்தின்போது விண்வெளி வீரர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை வழங்குவது என பல்வேறு நாடுகளில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயல்படுத்தவுள்ள ககன்யான் விண்வெளித் திட்டத்தில் பங்கேற்கும் வீரர்களுக்கு சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, அல்வா, பாதாம், இட்லி உள்ளிட்ட 30 வகை உணவுப் பொருள்களைத் தயாரித்து வழங்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இவை நீண்டநாள்களுக்கு கெட்டுப் போகாமல் இருப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Chandrayaan-3: நாளை நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3 விண்கலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ