Video: விண்வெளியில் 355 நாட்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்!

ரஷ்யா மற்றும் அமெரிக்கா போர் காரணமாக பிளவு பட்டுள்ள போதிலும், ரஷ்யா மற்று அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஒன்றாக பூமிக்கு திரும்பியுள்ள நிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 31, 2022, 08:56 AM IST
Video: விண்வெளியில் 355 நாட்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்! title=

ரஷ்யா மற்றும் அமெரிக்கா போர் காரணமாக பிளவு பட்டுள்ள போதிலும், ரஷ்யா மற்று அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஒன்றாக பூமிக்கு திரும்பியுள்ள நிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம். 

நாசா விண்வெளி வீரர்  மார்க் வந்தே ஹெய் , சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாட்கள் கழித்த பிறகு புதன்கிழமை பூமிக்குத் திரும்பினார்.  அவரை போலவே கடந்த ஆண்டை விண்வெளியில் கழித்த ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் பியோட்டர் டுப்ரோவ் மற்றும் அன்டன் ஷ்காப்லெரோவ் ஆகியோருடன் மார்க் வந்தே ஹெய் கஜகஸ்தானில் , ரஷ்ய விண்வெளி காப்ஸ்யூலில் வந்திறங்கினார்.

நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் கடந்த 2021, ஏப்ரல் 09 ஆம் தேதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில். 355 நாட்கள் தங்கியிருந்து வேலை செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது. 

மேலும் படிக்க | Space Anaemia: விண்வெளி வீரர்களுக்கு பெரும் சவாலாகும் ‘விண்வெளி ரத்த சோகை’!

மூன்று விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்புவதை நாசா நேரடி ஒளிபரப்பு செய்தது. அந்த வீடியோவை கீழே காணலாம்: 

 

நாசா வெண்வெளி வீரர் மற்றும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் பியோட்ர் டுப்ரோவ்) பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், இவர்கள் மூவரும் மீண்டும் தங்களது வழக்கமான பணியை மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

உக்ரைனுடனான விளாடிமிர் புட்டினின் போர் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும், வந்தே ஹெய்யின் வருகை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டது.  ஒரு வருட காலத்திற்கு பூமிக்கு வருகையில், முற்றிலும் மாறுபட்ட புவி ஈர்ப்பு விசை, தட்பநிலை, சுற்று சூழல் போன்ற காரணங்களால், விண்வெளி வீரர்களுக்கு உதவ நாசா மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தயாராக இருந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு பிறகு வந்தே ஹெய் மற்றும் டுப்ரோவ் ஆகியோருக்கு புவி ஈர்ப்பு விசையை உணர்கின்றனர். ஷ்காப்லெரோவ் அக்டோபரில் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் அவர்களுடன் இணைந்தார். சிறிது காலம் தங்குவதற்கு ரஷ்ய படக்குழுவையும் அழைத்துச் சென்றார். 

மேலும் படிக்க | விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா? ரகசியமாக ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News