இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுபெறும் -டிரம்ப்!!

அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

Last Updated : Jun 12, 2018, 08:33 AM IST
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுபெறும் -டிரம்ப்!! title=

அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு 41 நிமிடங்கள் நடந்தது என தகவகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பானது, சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.  சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசத்தனர். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாது..! 

கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. “ கிம் ஜாங் அன்-னுடனான நேரடி பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. நானும், கிம் ஜாங் அன்னும் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண்போம். அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியா, அமெரிக்கா இணைந்து செயல்படும். அணு ஆயுதம் மட்டுமின்றி, வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News