அமெரிக்கா: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் 14 கோடியே மேலாக வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி ஓட்டுப்போட்டுவிட்டனர். வழக்கமான தேர்தலைவிட இந்த தேர்தலில் குடியசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்பப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்ன் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. வழக்கமான தேர்தலைவிட அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதை யுகிக்க முடியாத அளவு கடும் போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர ஹிலாரியும், டிரம்பும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஹிலாரி தமது பிரச்சாரத்திற்கு பாப் பாடகிகள் உள்ளிட்ட நட்சத்திரங்கிள பயன்படுத்தி வருகிறார். டிரம்பை பொறுத்தவரை நட்சத்திர பிரச்சாரம் இல்லை என்றாலும் அவர் தனது குடும்பித்தினரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார். அதிபர் வேட்பாளர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி பேசி வருகிறார்கள். அனல்பறக்கும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். உலகமே மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நாளை அமெரிக்க மக்கள் தீர்ப்பளிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.