விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இன்று லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்!!
விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்சே, கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் ரகசியங்கள், பிரபலங்களின் ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவையே ஆட்டம் காட்டினார். இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது.
அசாஞ்சேவை கைது செய்வதற்கு அமெரிக்கா திட்டமிட்ட சமயத்தில், அவர் பாதுகாப்புக்காக, இங்கிலான்து நாட்டின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்தார். கடந்த 7 வருடங்களாக அவர் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் பாதுகாப்பாக தஞ்சமைடைந்திருந்த நிலையில், அவருக்கு கொடுத்து வந்த அடைக்கலத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஈக்வடார் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், அவரை கைது செய்துகொள்ளலாம் என்றும் அமெரிக்க அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, அசாஞ்சேவை இன்று லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AFP News Agency : British police arrest Wikileaks founder Julian Assange pic.twitter.com/Gry9G3wULw
— ANI (@ANI) April 11, 2019