சமைக்கப்படாத உணவுகள் பற்றி வீடியோக்கள் போட்டு பிரபலமானவர் இன்ஸ்டாகிராம் influencer ஆன ஜன்னா டி'ஆர்ட். இவரது மரணம் தான் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பிரபலம் மரணம்:
ஆரோக்கியமான உணவுகள் பற்றி தொடர்ந்து பேசி வந்த ரஷ்ய நாட்டின் influencer தான் ஜன்னா டி'ஆர்ட் என்று அழைக்கப்படும் ஜன்னா சாம்சோனோவா. அவரது மரணம் பட்டினி மற்றும் சோர்வு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அவர் பல வாரங்களாக பின்பற்றி வந்த பழங்களை மட்டும் சாப்பிடும் டயட் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சிங்கப்பூர் ஜலசந்தி வழியாக சென்ற கப்பலில் இருந்து காணாமல் போன இந்தியப் பெண்மணி!
உடலை கவனிக்காததால்...
பல ஆண்டுகளாக, ஜன்னா தனது சமூக வலைதள கணக்குகளில் சமைக்காத சைவ உணவு முறைகள் பற்றி பதிவிட்டு அதை சாப்பிட சொல்லி வலியுறுத்தி வந்துள்ளார்.அவரது உணவில் முக்கியமாக பழங்கள், சூரியகாந்தி விதைகள், பழச்சாறுகள் இருந்தன. இவை அனைத்தும் அவரை ஆரோக்கியமாக்கும் என அவர் நம்பியுள்ளார். இருப்பினும் கடைசியாக வெறும் பழ உணவுகளை மட்டும் எடுத்தது அவரது உடலை பலவீனமாக்கியுள்ளது.ஜன்னாவின் நெருங்கிய நண்பர் ஒருவர், ஜன்னாவின் உடல்நிலையை பார்த்து மருத்துவரை அணுக சொல்லியுள்ளார். ஆனால் அதை அவர் காது கொடுத்தும் கேட்கவில்லை.
ஊட்டச்சத்து குறைபாடு..
ஜன்னாவின் அம்மா ரஷ்ய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தனது மகளின் உடல்நிலை மோசமடைந்ததற்கு காரணம், "காலரா போன்ற நோய்த்தொற்று" மற்றும் அவரது சைவ உணவு முறையால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு தான் என தெரிவித்தார். சமைக்காத உணவுகளை சாப்பிட்டால், எப்போதும் இளமையாக இருக்கலாம் என ஜன்னா நம்பியதாகவும் அவரது அம்மா தெரிவித்துள்ளார். சொந்தமாக டயட் இருப்பது எப்போதும் ஆபத்து என்றும், ஒவ்வொருவரின் உடல்நிலையும் மாறுபடும் என்பதால் ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரை இல்லாமல் இப்படி ஜன்னா போல டயட் இருப்பது தவறு என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது இரண்டாவது மரணம்..!
ஜன்னாவை போலவே இன்னொரு இன்ஸ்டாகிராம் பிரபலமும் சில நாட்களுக்கு முன்னர் மரணத்தை தழுவினார். உடற்பயிற்சிகள் செய்து வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமான அவர் வித்தியாசமான தசை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதை அவர் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இருந்ததால் இந்த மரணம் நேர்ந்தது. தற்போது அதே போல இன்னொரு பிரபலமும் உயிரிழந்துள்ளார். இவ்வாறு பிறருக்காக தாங்கள் செய்யும் விஷயங்களை வீடியோவாக பதிவிட்டு பிரபலமான இவர்களுக்கு நேர்ந்த நிலை, இவர்களது ரசிகர்களுக்கும் நேர்ந்து விட கூடாது என சிலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். தற்போது உயிரிழந்துள்ள ஜன்னாவின் ரசிகர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | லைனில் நின்று விசா வாங்க வேண்டாம்! இந்தியர்களுக்கு இ-விசாவை அறிமுகப்படுத்தியது ரஷ்யா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ