இளம்ஜோடியினர் தாக்கப்பட்டதை எதிர்த்து ‘ஃப்ரீ ஹக்ஸ்’ போராட்டம்!

ரயில் நிலையத்தில் இளம் ஜோடியினர் தாக்கப்பட்டதை எதிர்த்து ஃப்ரீ ஹக்ஸ் போராட்டத்தில் மாணவர்கள்! 

Last Updated : May 2, 2018, 03:26 PM IST
இளம்ஜோடியினர் தாக்கப்பட்டதை எதிர்த்து ‘ஃப்ரீ ஹக்ஸ்’ போராட்டம்!  title=

மெட்ரோ ரயிலில் இளம் ஜோடியினர் தாக்கப்பட்டதை எதிர்த்து ஃப்ரீ ஹக்ஸ் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டடுள்ளனர்! 

கொல்காத்தாவின் டும் டும் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், இளம் ஜோடியினரை அந்த ரயிலில் பயணித்த முதியவர்கள் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கூடியிருந்த இளைஞர்கள் முதியவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.

முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்துள்ள இச்சம்பவம் பின்னர் அடிதடியாக மாறியுள்ளது. ரயிலில் பயணித்த கூட்டத்திடம் இருந்து தனது துணையாளரை காக்க சம்பந்தப்பட்ட பெண் போராடியும் பலனளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டும் டும் ரயில் நிலையத்தில் திரண்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் 'ஃப்ரீ ஹக்ஸ்' என்ற போராட்டத்தை நடத்தினர். கட்டிப்பிடிப்பது என்பது அநாகரீகமான செயல் இல்லை என்றும், இது அன்பின் வெளிப்பாடும் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

 

Trending News