தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியா அணி பீல்டிங் செய்த போது கேமரான் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது.
இதைக்குறித்து விசாரித்த போது, கேமரான் பேங்கிராப்ட் தனது தவறை ஒப்புக்கொண்டார். இது தங்களுக்கு தெரிந்து தான் நடந்தது. அதற்காக மன்னிப்பு கேட்கிறோம். இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்தார்.
ஸ்மித், வார்னர்-க்கு கிரிக்கெட் விளையாட 1 ஆண்டு தடை!
இதனையடுத்து, ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும், கேமரான் பேங்கிராப்ட்போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்தது ஐசிசி.
சன்ரைஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வார்னர்
இன்று, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஓராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பை அடுத்து, ஐபிஎல் தொடரிலும் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு இடம் இல்லை. அவர்களுக்கு மாற்று வீரர்களை அந்தந்த அணி நிர்வாகம் தேர்வு செய்து கொள்ளலாம் என ஐபிஎல் கமிட்டி கூறியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக அஜிங்கே ரஹானே நியமிப்பு!!
இந்நிலையில், இதுக்குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்கு பின்னர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தடை விதித்தது.