சனிக்கிழமை தினபலன் : 26-05-2018
மேஷம்:
இன்று குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். சகோதர சகோதரிகளின் அன்பு முழுமையாக கிடைக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களின் பாசம் முழுமையாக கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
ரிஷபம்:
இன்று தண்ணீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். பிரிந்து போன நண்பர்கள் ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் உறவு பிரகாசிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
மிதுனம்:
இன்று தந்தை வழி உறவினர்களுடன் உறவு மேம்படும். வேலை செய்யும் இடத்தினில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எந்த முடிவெடுத்தாலும் மனைவியிடம் ஆலோசனை செய்து எடுங்கள். நன்மையான பல காரியங்கள் நிகழும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கடகம்:
இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். உங்கள் குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சிம்மம்:
இன்று இயந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். வீண் செல்வுகளை தவிர்த்தல் நலம். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6
கன்னி:
இன்று சோம்பலைத் தவிர்த்தல் நன்மை தரும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். வாகனங்கள் ஓட்டும் போது கவனம் தேவை. முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் பரிபூரணமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
துலாம்:
இன்று தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வருங்கால சேமிப்புகளுக்கு சம்பாதிப்பீர்கள். சின்ன சின்ன சுப செலவுகள் வரலாம். சுபவிரையங்கள் ஏற்படும். மிக நீண்ட நாட்களாக வராமல் இருந்த நல்ல செய்தி வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
விருச்சிகம்:
இன்று சகோதர சகோதரிகளிடம் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நிலம், வீடு, வாகனம், ஆடை போன்றவைகள் புதிதாக வாங்கலாம். தாய், தாய் வழி உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகளை கவனமுடன் கண்கானிக்க வேண்டி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
தனுசு:
இன்று வாதம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
மகரம்:
இன்று பல நன்மைகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளிடம் இணக்கமாக இருப்பீர்கள். சந்தோஷமான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
கும்பம்:
இன்று உங்கள் அன்பை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவீர்கள். பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இனிய சூழ்நிலை நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
மீனம்:
இன்று வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த பணி இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். வாழ்க்கையில் மற்ற மனிதர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நீண்ட நாட்களாக இழுத்து வந்த ஒரு பிரச்சினை சுமூகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
மேலும் தொடர்புக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் > http://www.kuppuastro.com & மெயில் ஐடி : ramjothidar@gmail.com