இன்றைய (29-04-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க!

இன்றைய நாள் எப்படி இருக்கும்: உங்கள் அதிஷ்ட நிறம் மற்றும் அதிஷ்ட எண் - உள்ளே!!

Last Updated : Apr 29, 2018, 07:58 AM IST
இன்றைய (29-04-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க! title=

April 29, 2018: ஞாயிற்றுக்கிழமை

மேஷம்: 
இன்று ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்: 
இன்று உத்யோகஸ்தர்களுக்கு விடுப்பு ஏற்க வேண்டி வரலாம். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சக ஊழியர்கள் உங்களைப்பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்:  
இன்று பெரியோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள். தொழிலில்  போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். திடீர் திருப்பங்களும் அதிரடி லாபங்களும் உண்டாகும். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். ஹோட்டல், புரோக்கரேஜ், கமிஷன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்: 
இன்று எதிலும் ஏமாற்றம், பங்கு தாரர்களுடன் மனக்கசப்பு, வேலை செய்யும் இடத்தினில் கூடுதல் வேலைப்பளு என மிகப்பெரிய சவாலை சமாளித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே அந்த நிலைகளிலும் முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்: 
இன்று மூத்த சகோதரர்களின் உதவியுடன் அனைத்து பிரச்னைகளும் தீரும். அதிகாரிகள் சற்றே எதிர்பார்ப்புடன் காணப்படுவார்கள். செலவுகள் வந்தாலும் புகழும் சேர்ந்து வரும். அலுவலக வேலைகளில் முதன்மையானவர் என்று பெயரெடுக்கலாம். உடல்நிலை காரணமாக அதிக செலவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி: 
இன்று பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

துலாம்: 
இன்று குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.  கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். பொதுவாக நினைத்த காரியங்களை அதன்  கஷ்டங்களுடன் எளிமையாக எதிர்கொள்வதும்  வீண் செலவுகளை குறைப்பதும் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதிருப்பதும் நன்மையைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்: 
இன்று அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாடு பயணம் சாதகமாக அமையும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
    
தனுசு: 
இன்று வாகன வசதிகள் சிறப்பாக அமையும். முக்கியமானவர்களை நேரே காண்பதும் சன்மானங்கள் பெறுவதும் நடைபெறும். காட்டுப் பகுதிகளுக்கு அரசு சார்பாக செல்ல வேண்டிவரும். வயதானவர்கள் தீர்த்த யாத்திரை செல்வார்கள், மகான்களின் தரிசனமும் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்: 
இன்று இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனச் சலனங்களில் இருந்து தப்பிக்க தியானம் பழகுங்கள். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

கும்பம்: 
இன்று வழக்குகள் வெற்றியை தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். வாகனம் வாங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்: 
இன்று பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகமான தர்ம விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அதிகாரப் பதவிகள் கிட்டும். வழக்குகளில் நல்ல வெற்றியை எதிர்பார்ப்பதுடன் எதிரிகள் வீழ்ச்சியையும் காணலாம். வெளி நாட்டுத்  தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Trending News