ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது!
சென்னை சாலைகளில் சிறார்கள் தங்களது பெற்றோரின் வாகனத்தை ஓட்டுவதுடன் பந்தயத்திலும் ஈடுபடுகின்றனர் விபத்துக்கள் ஏற்படுகிறது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் சென்னை காவல் துறை புதிய நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிறார்கள் வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ. 1,000 அபராதமும், 3 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை சென்னை காவல்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.